சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றியத்தலைவர் தேர்தலில் தோல்வி

Added : ஜன 14, 2020
Advertisement

சிவகங்கை,:கல்லல் ஒன்றியத்தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் தேர்தல் அலுவலர் மீது ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஐந்து பேர் புகார் தெரிவித்துள்ளனர்.கல்லல் ஒன்றியத்தில் 16 வார்டுகளில் தி.மு.க., 6, காங்., 2, வி.சி.க., 1 என தி.மு.க., கூட்டணி 9 இடத்திலும், அ.தி.மு.க., 7 இடங்களிலும் வென்றது. ஜன.11 ல் நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் 12 வது வார்டில் போட்டியின்றி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமாவும், தி.மு.க., சார்பில் 13 வது வார்டு கவுன்சிலர் சொர்ணமும் போட்டியிட்டனர். இதில் சொர்ணம் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இத்தேர்தலில் இருகட்சியை சேர்ந்த தலா ஒரு கவுன்சிலர் கட்சி மாறி ஓட்டுப்போட்டதாக இரு கட்சியிலும் புகைச்சல் கிளம்பியது. அன்று மாலையே தி.மு.க., கவுன்சிலர் சங்கீதா அ.தி.மு.க.,வில் இணைந்தார். இதனால் இரு அணிகளின் எண்ணிக்கையும் சமபலம் பெற்றது. ஒன்றிய துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதில் தி.மு.க.,வுக்கு பிரச்னை ஏற்பட்ட நிலையில் தேர்தல் நடக்கும் அரங்கிற்கு அ.தி.மு.க.,வினர் வரவில்லை. இதனால் போதிய உறுப்பினர் எண்ணிக்கை இல்லாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அ.தி.மு.க., கவுன்சிலர் பிரேமா, மறைமுக தேர்தலின்போது ஓட்டுச்சீட்டில் வரிசை எண்ணுடன், வார்டு எண்ணும் இருந்ததாகவும், தேர்தல் அதிகாரி அவ்வப்போது யாருக்கு யார் வாக்களித்துள்ளார்கள் என்பதை கூறிக்கொண்டே இருந்ததாகவும், அதனால் தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கலெக்டர் ஜெயகாந்தனிடம் புகார் அளித்தார். இதே புகாரை வலியுறுத்தி அவருடன் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோமளவள்ளி, ராஜமலர், உஷாராணி மற்றும் தி.மு.க.,விலிருந்து விலகி புதிதாக சேர்ந்த சங்கீதா ஆகியோர் மட்டும் நேற்று சிவகங்கை கலெக்டரிடம் நேரில் புகார் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X