ஓட்டுனர், நடத்துனர் பற்றாக்குறையால் சில அரசு பஸ்களில் டிரிப் கட்

Added : ஜன 14, 2020
Advertisement

சிவகங்கை, சிவகங்கை அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் பற்றாக்குறையால் சில அரசு பஸ்களில் டிரிப் கட் செய்யப்படுகிறது.இங்குள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இக்கிளையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பற்றாக்குறை உள்ளது. இதனால் முக்கிய ஊர்களுக்கு செல்லும் சில அரசு பஸ்கள் பகல் நேரத்திற்கு பிறகு இயக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பாகனேரி, மேலுார், கட்டாணிபட்டி, தனியாமங்கலம், திருப்புவனம் உள்ளிட்ட முக்கிய கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காலையில் ஊர்களுக்கு சென்று வந்த பிறகு பகலில் இயக்கப்படுவதில்லை. அந்த நேரத்தில் ஓட்டுனர், நடத்துனர் மாற்றப்படுவார்கள். அப்போது ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இப்பஸ்கள் வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை சில டிரிப்கள் கட் செய்யப்படுகிறது. இப்பஸ்சை நம்பியுள்ள கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக மாலை நேரங்களில் பள்ளி முடித்து வீட்டுக்கு செல்லும் மாண்வர்கள் பஸ் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.ஒரே பஸ்சில் படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. எனவே போக்குவரத்துக்கழக நிர்வாகம் உரிய போக்குவரத்து தொழிலாளர்களை நியமித்து பஸ் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கழக அலுவலர் ஒருவர் கூறியதாவது: ஒரு சில நாட்களில் தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டிருக்கலாம், மற்றபடி பஸ்களை நிறுத்துவதில்லை. தாமதமாக இயக்குவதும் சரி செய்யப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X