சாலைக்கிராமம் வழியாக பஸ் நிறுத்தம்

Added : ஜன 14, 2020
Advertisement

இளையான்குடி, ராமநாதபுரத்திலிருந்து சாலைக்கிராமம் வழியாக மதுரை சென்ற பஸ் கடந்த 2 வருடங்களாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இயக்கப்பட்டதையடுத்து சாலைக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்பாலைக்குடியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம்,சாலைக்கிராமம்,இளையான்குடி,சிவகங்கை வழியாக மதுரைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு பஸ் இயக்கப்பட்டது. சாலைக்கிராமம்,இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்று வர வசதியாக இருந்தது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து அந்த பஸ்சை இயக்க கோரிக்கை விடுத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே வழித்தடத்தில் மீண்டும் அந்த பஸ் இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X