பொது செய்தி

தமிழ்நாடு

சாலை ஆக்கிரமிப்பு அகற்ற பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

Added : ஜன 14, 2020
Advertisement
சாலை ஆக்கிரமிப்பு அகற்ற பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ராஜவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக, புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் ராஜவீதியில் உள்ள கடை உரிமையாளர்கள் பலர், கட்டடங்களின் முன்பு சிமென்ட் மற்றும் தகர கூரை அமைத்து, பேரூராட்சி இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதை, அகற்ற வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.இதையடுத்து, ஒரு பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்பை அகற்றிய பேரூராட்சி நிர்வாகம், பிற பகுதிகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டுகிறது.அரசியல் தலையீடு காரணமாக, ஆக்கிரமிப்பை அகற்றுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் கூறியதாவது:ஆக்கிரமிப்பு அளவு குறித்து, கட்டட உரிமையாளர்களுக்கு குறித்து கொடுத்துள்ளோம். அவர்களே அதை அகற்ற, அவகாசமும் அளித்துள்ளோம். அவர்கள் அகற்றவில்லை என்றால், நாங்கள் அகற்றுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X