பொது செய்தி

தமிழ்நாடு

அரியக்குடி புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளியில் ‛வினாடி-வினா போட்டி

Added : ஜன 14, 2020
Advertisement

காரைக்குடி, தினமலர் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களுக்கான பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற வினாடி-வினா போட்டி அரியக்குடி புனிதமைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து தரும் வகையில் தினமலர் நாளிதழ், 'பட்டம்' மாணவர் பதிப்பை வெளியிடுகிறது. பொதுஅறிவை வளர்க்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் பட்டம் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் சார்பில் வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.இப்பள்ளி மாணவர்களுக்கு முதல்நிலைபோட்டியான எழுத்து தேர்வு போட்டி நடந்தது. இதில், 16 மாணவர்களை ஆசிரியர் குழுவினர்தேர்ந்தெடுத்தனர். இவர்கள் 'ஏ' முதல் 'எச்' வரையிலான, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கு இரண்டாம் நிலைதேர்வான வினாடி- வினா போட்டி நடந்தது. போட்டியை முதல்வர் ரோஸ்லின் ஜூலியானா தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ்,ரெபேக்காள் நடத்தினர். இப்போட்டியில், 'டி' பிரிவு மாணவிகள் ர.ரெவினா மற்றும் பா.கனிமொழி முதல் பரிசை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மெடல்கள், சான்றிதழ்களை அரியக்குடி புனித மைக்கேல் கல்வியியல் கல்லுாரி முதல்வர் செல்லத்துரை, பள்ளி துணை முதல்வர் சொர்ண லதா வழங்கினர். முதல்நிலையில் வென்று வினாடி-வினா போட்டியில் பங்கேற்றவர்கள்; 7ம் வகுப்பு; எஸ்.மகாலட்சுமி, ர.ரெவினா. 8ம் வகுப்பு; கே.காவியாஸ்ரீ, சோ.தீபஷிகா, ச.மோகனபிரியா ,கே.இந்துஜா, பி.பாலமுருகன், சி.நிரஞ்சன் 9ம் வகுப்பு; ஜே.செல்வி10ம் வகுப்பு; பா.கனிமொழி, அ.ஜெஸ் நேவிஸ், மா.மதனஸ்ரீ செ.சர்மிதா,செ.கீர்த்திகா, ர.உதயசங்கரி, எஸ்.நமீதாஸ்ரீ.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X