பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல்

Added : ஜன 14, 2020
Advertisement

சிவகங்கை சிவகங்கை ஸ்ரீபாலமுருகன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. நிறுவனர் பார்வதி பொங்கல் விழா குறித்து விளக்கினார். கலை நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் ஆர்த்தி, ஆசிரியர்கள், உதவியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.* சிவகங்கை சாய் பாலமந்திர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நிர்வாகி குமார், ஆர்த்தி குமார் பொங்கல் குறித்து விளக்கினர். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.தலைமை ஆசிரியர் கோமதிபாலா ,அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.* சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் சேகர் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். தலைமை ஆசிரியர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியர் தியாகராஜன் மற்றும் சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கபள்ளி தலைமை ஆசிரியர் நாகராணி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.*சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமையில் நடந்தது. மாணவர்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. சிவகங்கை வட்டாரக்கல்வி அலுவலர் பால்ராஜ் பேசினார். ஆசிரியர்கள் ரேவதி, வீரசின்னம்மாள், ஆரோக்கியமேரி, முத்துலெட்சுமி, சித்ரா விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.தேவகோட்டை:தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா. உடற்பயிற்சி கூட திறப்பு விழா பள்ளிஅதிபர் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் சாமி சத்திய மூர்த்திமுன்னிலை வகித்தார். தமிழாசிரியர் பவுலியன்ஸ் வரவேற்றார். முன்னாள் எம்.பி. செந்தில்நாதன் பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி, தேவகோட்டை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் பங்கேற்றனர்.தேவகோட்டை முள்ளிக்குண்டு சின்னப்பன் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் தலைமையில் நடந்தது. பொருளாளர் பெர்டின் சேவியர் முன்னிலை வகித்தார். முதல்வர் கணேசன் வரவேற்றார். லயன்ஸ் வட்டார தலைவர் சோமசுந்தரம்கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்,மற்றும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கினார்.சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது. ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். கோலம், விளையாட்டு பேச்சு போட்டிகள் நடந்தன.ஆசிரியைமுத்து மீனாள் ஏற்பாடுகளை செய்தார்.நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா தலைமையாசிரியர் ராஜதுரை தலைமையில் நடந்தது. மாணவிகளும், ஆசிரியைகளும் பொங்கல் வைத்தனர். மாவட்ட கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி மாணவர்களுக்கு பொங்கல், கரும்பு வழங்கினார்.16 வது தொகுதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. மண்டல தலைவர் ராமராஜன் முன்னிலை வகித்தார். செயலர் விஜயகுமார் வரவேற்றார். லயன்ஸ் முன்னாள் ஆளுநர் சின்னஅருணாசலம் , பங்கேற்றனர். பொங்கல் விழாவையொட்டி மாணவர்களுக்கு முத்தெடுத்தல், கல்சேகரித்தல், கோலப்போட்டி, நினைவு திறன் போட்டிகள் நடந்தன.இளையான்குடி:இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் சமத்துவப் பொங்கல் விழா செயலர் ஜபருல்லா கான் தலைமையில் நடந்தது.முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். ஆட்சிக்குழு தலைவர் முஹம்மது ஸுபைர் முன்னிலை வகித்தார்.மாணவர்கள் விஜயலக்ஷ்மி,புவனேஸ்வரி,ரஞ்சித் குமார், நைனாரப்பா,பாலபவித்ரா பொங்கல் கவிதை வாசித்தனர். புதுக்கோட்டை கம்பன் கழக இணை செயலாளர் பாரதி சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார்.காரைக்குடி: அமராவதி புதுார் சாரதா நிகேதன் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா தாளாளர் ஆத்மானந்த மஹாராஜ், கல்லுாரி ராஜா, முதல்வர் அபிராமிசுந்தரி, துணைமுதல்வர் உமா தலைமையில் நடந்தது. மாணவிகள், ஆசிரியர்கள், பாரம்பரிய உடையுடன் கல்லுாரி வளாகத்தில் மண்பானையில் பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.மானகிரி செட்டிநாடு, பப்ளிக் பள்ளியில் தாளாளர் குமரேசன், துணை தாளாளர் அருண்குமார், சாந்திகுமரேசன் வழிபாடு செய்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். மாணவர்களின் நடனம், கபடி, கயிறுஇழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய போட்டி நடந்தது.கோவிலுார் மடாலய கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவிலுார் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் கல்விக்குழுமத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. டாக்டர் சதாசிவம், முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, பொறியியல் கல்லுாரி முதல்வர் மயில்வாகணன் கலந்து கொண்டனர். காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் கார்த்திக், முதல்வர், தலைமையாசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.சிங்கம்புணரி: சிங்கம்புணரி மாவட்ட உரிமையியல் மற்றம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பார் அசோசியேசன் சார்பில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது. சிங்கம்புணரி நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமை தாங்கினார். பார் அசோசியேசன் தலைவர் எஸ்.அறிவுடைநம்பி,துணைத்தலைவர் எல்.ரமேஷ், செயலாளர் பி.எல்.துரைவேலன், துணைச்செயலாளர் சி.மணிகண்டன், பொருளாளர் அப்துல் ஹக்கிம் மற்றும் சங்க உறுப்பினர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.* சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் அன்பு தலைமை தாங்கினார். மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.திருப்புத்துார்: திருப்புத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த பொங்கல் விழாவிற்கு ஒன்றிய தலைவர் சண்முகவடிவேலு தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் ஜெயராம், சுமதி, முன்னிலை வகித்தனர்.டி.பி.டி.ஓ.,செழியன் வரவேற்றார். கவுன்சிலர்கள்,அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. கல்லுாரி ஆட்சிக்குழுத் துணைத் தலைவர் சகுந்தலைராஜன் அம்மாள் துவக்கி வைத்தார்.செயலர் ஆறுமுகராஜன், முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். பாரம்பரிய விளையாட்டுக்களான கயிறு இழுத்தல், உறியடித்தல், சிலம்பம்,கும்மி அடித்தல்,ஓயிலாட்டம் மற்றும் கோலப்போட்டிகள் நடந்தது.திருப்புத்துார் நேஷனல் அகாடமி சமுதாய கல்லுாரி சார்பில் பொங்கல் விழா நடந்தது.ஆ.பி.சீ.அ.கல்வியியல் கல்லுாரி செயலர் ராமேஸ்வரன் தலைமை வகித்தார். தாளாளர் காசிநாதன் வரவேற்றார்.பேராசிரியர் ராஜமாணிக்கம், பெரிய பள்ளிவாசல் நிர்வாகி கான் முகமது பங்கேற்றனர். கல்லுாரி வளாகத்தில் செயற்கைகிராமம் அமைக்கப்பட்டு பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வென்றவர்களுக்கு டாக்டர் ஜெகதீசன் பரிசுகள் வழங்கினார். முதல்வர் சுரேஷ் பிரபாகர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X