தமிழ்நாடு

தி.மு.க.,-- காங்., உறவில் இடைவெளிமவுனம் சாதிக்கும் மாவட்ட தலைமை

Added : ஜன 14, 2020
Advertisement

சிவகங்கை, -ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் சீட் ஒதுக்குவது, மறைமுக தேர்தலுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட பிரச்னைகளால் சிவகங்கை மாவட்ட தி.மு.க.,-காங்., உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இம்மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சி இணைந்து போட்டியிட்டது. சீட்களை பெறுவதிலும், விட்டுக்கொடுப்பதிலும் இரு கட்சிகளுக்குமிடையே மனக்குமுறல் இருந்தது. இந்நிலையில் கூட்டணி சார்பில் 4 மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும், 33 ஊராட்சி ஒன்றிய வார்டுகளிலும் காங்., போட்டியிட்டது. உடன்பாடு ஏற்படாத நிலையில் சாக்கோட்டை, இளையான்குடி, கல்லல், சிங்கம்புணரி ஒன்றியங்களில் ௫ இடங்களில் தி.மு.க.,வும், காங்., கட்சியும் நேரடி போட்டியை சந்தித்தது. இதில் இரண்டு இடங்களில் காங்., மூன்று இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றது. இது தவிர கூட்டணி சார்பில் போட்டியிட்டு ௨ மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும், 14 ஒன்றிய வார்டுகளிலும் காங்., வெற்றி பெற்றது. இந்நிலையில் மாவட்டத்தில் சில இடங்களில் கிடைத்த தோல்விக்கு இரு கட்சி தொண்டர்களும் பரஸ்பரம் புகார் கூறி வருகின்றனர்.இதற்கிடையில் மாவட்டத்தில் கல்லல் உள்ளிட்ட இடங்களில் காங்., கட்சிக்கு துணை தலைவர் பதவி கேட்கப்பட்டது. ஆனால் எந்தவொரு பதவியையும் விட்டுத்தர தி.மு.க., முன்வரவில்லை. இதனால் காங்., நிர்வாகிகள் வெளிப்படையாகவே தி.மு.க., மாவட்ட தலைமையை தாக்கிப்பேசி வருகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கும் இங்குள்ள நிலவரம் குறித்து புகார்களை அனுப்பி வருகின்றனர். அதே போல் தி.மு.க., வினரும், மாவட்டத்தில் பல இடங்களில் தங்களது வெற்றி பறிபோனதற்கு காங்., கட்சியே காரணம் என்றும், மறைமுக தேர்தலிலும் தங்களுக்கு அவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்றும், எனவே அக்கட்சியுடனான கூட்டணியை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் தலைமைக்கு புகார் அனுப்பி வருகின்றனர். இருதரப்பிலும் தொண்டர்கள் வசைமாறி பொழிய தலைமையும் மவுனம் காக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X