பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 11.87 லட்சம் பேர் மனு

Added : ஜன 14, 2020
Advertisement

சென்னை : தமிழகத்தில், நான்கு நாள் வாக்காளர் சிறப்பு முகாமில், 14.73 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பெயர் சேர்க்கக் கோரி மட்டும், 11.87 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும், 2019 டிசம்பர், 23ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியல், elections.tn.gov.in என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, டிச., 23 முதல், ஜனவரி, 22 வரை நடக்க உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, www.nvsp.in என்ற இணையதளத்திலும், 'VOTER HELPLINE' என்ற, 'மொபைல் ஆப்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

பொது மக்கள் வசதிக்காக, ஜன., 4, 5, 11, 12ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.நான்கு நாள் முகாமில் மொத்தம், 14.73 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெயர் சேர்க்கக் கோரி மட்டும், 11.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கக் கோரி, 82 ஆயிரத்து, 826 பேர்; திருத்தம் கோரி, 1.09 லட்சம் பேர்; முகவரி மாற்றக் கோரி, 93 ஆயிரத்து, 539 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் என்பதால், ஏராளமானோர் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளனர். ஏற்கனவே, வாக்காளர்கள் எண்ணிக்கை, ஆறு கோடியை தாண்டிய நிலையில், புதிதாக, 11.87 லட்சம் பேர், பெயர் சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், 'அனைத்து விண்ணப்பங்களையும், முறையாக பரிசீலிக்க வேண்டும். பெயர் நீக்கக் கோரும் மனுக்கள் மீது, அவசர கதியில் நடவடிக்கை எடுக்கக் கூடாது. வாக்காளர் இடம் பெயர்ந்திருந்தாலோ, இறந்திருந்தாலோ, அதை உறுதி செய்த பிறகே, பெயரை நீக்க வேண்டும்' என, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X