பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பில்லை! கடன் வாங்கி விளைவித்த விவசாய பொருட்களுக்கு....ஒழுங்குமுறை விற்பனைகூடம் மேம்படுத்தப்படுமா...உத்திரமேரூர் சுற்றுவட்டார விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஜன 14, 2020
Advertisement
 பாதுகாப்பில்லை! கடன் வாங்கி விளைவித்த விவசாய பொருட்களுக்கு....ஒழுங்குமுறை விற்பனைகூடம் மேம்படுத்தப்படுமா...உத்திரமேரூர் சுற்றுவட்டார விவசாயிகள் எதிர்பார்ப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், விளைபொருட்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.மேலும், அடிப்படை வசதி இல்லாததால், இங்கு வருவோர் அவதிப்படுகின்றனர்.கடன் வாங்கி விளைவித்த விவசாய பொருட்களுக்கு...ஒழுங்குமுறை விற்பனை கூடம் மேம்படுத்தப்படுமா?உத்திரமேரூர் சுற்று வட்டார விவசாயிகள் எதிர்பார்ப்பு..
உத்திரமேரூர் - மானாமதி சாலையில் உள்ள வேடபாளையத்தில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், 1977ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.இங்கு, உத்திரமேரூரைச் சுற்றியுள்ள, வேடபாளையம், ஆணைப்பள்ளம், சோமநாதபுரம் உட்பட, 18க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், தாங்கள் பயிரிட்ட நெல், வேர்க்கடலை, எள், தேங்காய், உளுந்து, பச்சை பயறு உள்ளிட்ட விளை பொருட்களை, எடுத்து வந்து, ஒழுங்குமுறை கூடத்தில் விற்பனை செய்கின்றனர்.இந்த விற்பனை கூடத்திற்கு சுற்றுச்சுவர் வசதி இல்லை. பெயரவுக்கு, முன்பக்கம் மட்டும், குறைந்த அளவுக்கு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.பிரதான நுழைவாயில் இரும்பு கதவு போடப்பட்டுள்ளது. எனினும், அவை எப்போதும் திறந்தே கிடக்கின்றன.
இதனால், விற்பனை கூடத்தின் வராண்டாவில், விவசாயிகள் வைத்துவிட்டு செல்லும் விளைபொருட்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.மேலும், பாதுகாப்பு காவலர்கள் இல்லாததால், விற்பனைகூட வளாகத்தை, சமூக விரோதிகள், மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். அதன் வளாகத்திலேயே, மது பாட்டில்கள் கிடக்கின்றன.விளை பொருட்களை விற்பனை செய்ய, விற்பனை கூடத்திற்கு காலையில் வரும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து விலை நிர்ணயம் செய்யும் வரை, நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஆனால், காத்திருக்கும் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவற்றை, அரசு இதுவரை ஏற்படுத்தவில்லை.விற்பனைகூட ஊழியர்களுக்கு மட்டுமே, இங்கு கழிப்பறை வசதி உள்ளது. இதனால், விவசாயிகள் இயற்கை உபாதை கழிக்க அவதிப்படுகின்றனர்.மேலும், மாட்டு வண்டியில் விளைபொருட்களை ஏற்றி வர பயன்படுத்தப்படும் மாடுகளுக்கும், தண்ணீர் வசதி இல்லை.எனவே, ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, சுற்றுச்சுவர் அமைக்கவும், பாதுகாவலர் நியமிக்கவும், விவசாயிகளுக்கு கழிப்பறையும், மாடுகளுக்கு தண்ணீர் தொட்டி வசதியும் ஏற்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X