பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவர்களிடம் பொறுப்பு தனி அலுவலர்களுக்கு அரசு உத்தரவு

Added : ஜன 14, 2020
Advertisement

சென்னை : 'புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர்களிடம் ஊராட்சி பொறுப்புகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் அனுப்பியுள்ள கடிதம்:கிராம ஊராட்சி தனி அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அவர் பொறுப்பேற்றதற்கான அறிக்கையை தீர்மான பதிவேட்டில் பதிவு செய்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அளிக்க வேண்டும்.ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தலைவர்கள் பொறுப்பேற்றதற்கான அறிக்கையை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

கிராம ஊராட்சியில் பராமரிக்கப்படும் 31 விதமான பதிவேடுகள் மற்றும் ரசீது புத்தகங்களை தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பதிவேடுகள் அனைத்தும் ஊராட்சி அலுவலகத்தில் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும்; வேறு எங்கும் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.ஊராட்சி வங்கி கணக்கு புத்தகங்கள் ரொக்கப் புத்தகங்கள் ஆகியவற்றை தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை அலுவலகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.

ஊராட்சியில் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அதிகாரம் உடையவர்களான தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு மீத இருப்பு தொகை விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X