நம்மிடமே இல்லை பொறுப்பு

Added : ஜன 14, 2020
Share
Advertisement

சாத்துார், ;விருதுநகர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதி ரோட்டின் ஒரம் வீசி எறியப்படும் குப்பையால் நாளுக்கு நாள் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சிப்பகுதிகளில் வீடுகளுக்கே வந்து குப்பை சேகரிக்கப்படுகின்றன. எனினும் வீதிகளில் குப்பை கொட்டுவது தொடர்கிறது. வீதிகளில் குவியும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உணவு பொருட்களுடன் வீசப்படும் பாலிதீன் பைகளை உண்ணும் கால்நடைகள் உயிரிழக்கின்றன. மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து வழங்காமல் மொத்தமாக கொட்டுவதால் இவற்றை பிரிப்பதில் தொழிலாளர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பழைய பிளேடு, துருபிடித்த கத்தி, உடைந்த கண்ணாடி பாட்டில்களை குப்பை தொட்டிகளில் இருந்து பிரித்து எடுக்கும் தொழிலாளிகளின் கைளை அவை பதம் பார்க்கின்றன. மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் இது போன்ற அவல நிலை தொடர்கிறது. மக்கும் மக்காத குப்பையை பொதுமக்களே பிரித்து வழங்க வேண்டும். தெரு ஒரம் ரோட்டின் ஒரங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். குப்பையை கிளறும் கால்நடைகளான பன்றிகள், நாய்களால் பாதசாரிகள் வாகன ஒட்டிகள் பாதிக்கின்றனர். இவற்றை தவிர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரோட்டின் ஒரம்,காலி இடங்களில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பையில் கிடக்கும் உணவுகளை உண்பதற்கு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் ரோட்டின் குறுக்கும் நெடுக்குமாக ஒடுகின்றன. கால்நடைகளால் இருசக்கர வாகன ஒட்டிகள், பாதசாரிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர். ரோட்டின் ஒரத்தில் குப்பையை கொட்டி எரிப்பதால் இதில் எழும் புகையால் பலர் பாதிக்கும் நிலை உள்ளது. ரோட்டோரங்களில் குப்பை வீசுவதை தவிர்க்க பொதுமக்கள் முன் வர வேண்டும்.-- ஜெயப்பிரகாஷ், வியாபாரி, சாத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X