பொது செய்தி

தமிழ்நாடு

முட்டுக்காடில் 16ல் படகு போட்டி

Added : ஜன 14, 2020
Advertisement

மாமல்லபுரம்:முட்டுக்காடு, முதலியார்குப்பம், சுற்றுலா படகு குழாம்களில், பயணியரிடம், படகு போட்டி, 16ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மாநிலம் முழுதும், சுற்றுலாப் படகு குழாம்கள் நடத்துகிறது. இங்கு, சுற்றுலாப் பயணியர், பல வகை படகுகள் இயக்கி மகிழ்கின்றனர். இவர்களிடம், 16ம் தேதி, படகு போட்டி நடத்த, நிர்வாகம் அறிவித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், முட்டுக்காடு, கூவத்துார் அடுத்த, முதலியார்குப்பம் பகுதிகளில், பக்கிங்ஹாம் கால்வாய் நீர்பரப்பில், படகு குழாம்கள் இயங்குகின்றன.
முதலியார்குப்பத்தில், கயாக், மிதி, துடுப்பு வகைகள்; முட்டுக்காட்டில், துடுப்பு வகை மட்டும் என, காலை, 11:00 மணி முதல், நண்பகல் 1:00 மணி வரை, போட்டி நடக்கும். முதல் மூன்று இடங்களில், வெற்றி பெறுவோருக்கு, பரிசு உண்டு. இதற்கென, நுழைவுக் கட்டணம் இல்லை. படகிற்கு கட்டணம் செலுத்தும் பயணியர், பங்கேற்கலாம் என, நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தமிழக, அனைத்து படகு குழாம்களிலும், இப்போட்டி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X