சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் மீது கார் மோதி பயங்கர விபத்து

Added : ஜன 14, 2020
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த இரு வாகனங்களும் பள்ளத்தில் கவிழ்ந்தன.

இதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் இறந்தனர்.திருச்சி ஒரத்துார் பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வன் 32; ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பயிற்சிக்காக அயர்லாந்து சென்றவர் 9ம் தேதி சென்னை வந்தார்.சென்னையில் உறவினர் வீட்டில் மனைவி நிஷா 30 மற்றும் 7 வயது மகன் 1 வயது மகள் 70 வயது மாமியாருடன் தங்கியிருந்தார்.நேற்று காலை 'போர்டு' காரில் அனைவரும் திருச்சிக்கு புறப்பட்டனர். காரை முத்தமிழ்ச்செல்வன் ஓட்டினார். காலை 11:50 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தது.அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனைத் தாண்டி எதிர் திசை சாலையை நோக்கி பாய்ந்தது.

எதிரில் விருத்தாசலம் பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த வெங்கடேஸ்வரா என்ற தனியார் பஸ்மீது கார் மோதியது.பஸ் அதிவேகமாக சென்றதால் காரை 800 மீட்டர் துாரத்திற்கு சாலையிலேயே இழுத்து சென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் பஸ் இரண்டும் கவிழ்ந்தன.விபத்தில் காரில் பயணித்த நிஷா முத்தமிழ்ச்செல்வன் அவரது மாமியார் சம்பவ இடத்திலேயே இறந்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்குப் போராடிய குழந்தைகள் இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.கார் இடிபாடுகளில் சிக்கிய மூவரின் உடல்களை 30 நிமிட போராட்டத்திற்கு பிறகே மீட்டனர். பஸ் கவிழ்ந்ததில் ஏழு பயணியர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X