பொது செய்தி

தமிழ்நாடு

பகையையும் நட்பாக்கிய பொங்கல்

Added : ஜன 14, 2020
Advertisement

விருதுநகர்மதத்தை ஏற்று கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்று கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடி வரும் ஸ்ரீவித்யா கல்வியியல கல்லுாரி மாணவிகளே சாட்சி. இக்கல்லுாரியில் படிக்கும் அனைத்து மாணவிகளும் பொங்கலையும், கரும்பையும் ருசிக்கும் அழகில் தெரிகிறது நம் தமிழ்நாட்டு பொங்கல் என்பது இன்னும் மதத்துடன் இணைக்காமல் இன்னும்கூட எல்லாரும் கொண்டாடும் விழா என்று.இந்த ஆண்டும் சமத்துவ பொங்கல் கல்லுாரி முதல்வர் ராஜா தலைமையில் கொண்டாடப்பட்டது. மாணவிகள் அனைவரும் பட்டு சேலைகள் அணிந்து, கரும்பு நட்டு நடுவில் கல் அடுப்பு மூலம் பொங்கல் பானைகளில் சர்க்கரை பொங்கல் படைத்தனர். பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என கூக்குரலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதை தொடர்ந்து கோலப்போட்டி, நடனம் என கலைநிகழ்ச்சிகளில் கலக்கினர்.கூட்டு குடும்பத்தை உணர்த்தும் விழாவளர்ந்து வரும் நாகரீக உலகில் நமது பண்டைய தமிழ் கலாசாரம் தொடர்ந்திடும் வகையில் கல்லுாரியில் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்கு சாதி, மத ,சமய பேதம் கிடையாது. அனைத்து மாணவிகளும் சேர்ந்து கொண்டாடக் கூடிய இவ்விழாவானது உற்சாகத்தையும் , சகோதாரத்துவத்தையும் அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. மாணவிகள் கூடி நின்று பொங்கல் கொண்டாடுவது இன்றைய தலைமுறையினருக்கு கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.- -ராஜா, கல்லுாரி முதல்வர், ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லுாரிஒரு மாதம் முன்பே தயாரானோம்புத்தாண்டு பிறந்து சில நாட்களிலே பொங்கலும் வருவதால் கல்லுாரியில் ஒரே கொண்டாட்டம் தான். இந்த சமத்துவ பொங்கலுக்காக ஒரு மாதத்திற்கு முன்பே தயாராகி வந்தோம். ஆண்டு முழுவதும் படிப்பில கவனம் செலுத்துவோம். ஆனால் பொங்கல் வந்தால் மட்டும் குதுகலமாகி விடுவோம். எங்கள் கல்லுாரி முன்பு கரும்பு நட்டு பானையில் பொங்கல் வைக்கும் அனுபவம் வாழ்வில் என்றும் புதிய அனுபவமாக இருக்கும்.-- ஜெயபிரியங்கா, முதலாமாண்டு ஆசிரியர் பயிற்சி மாணவிஎந்த பண்டிகையிலும் இல்லா மகிழ்ச்சிஇந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த மாணவிகள் மதங்களை கடந்து பாரம்பரிய உடைகளான சேலை அணிந்து பொங்கல் வைத்தோம். மாக்கோலம், மாவிலை தோரணங்கள் கட்டி செங்கற்கள் கொண்ட அடுப்பில் விறகுகளை அடுக்கி தீமுட்டி பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என உற்சகமாக குரல் எழுப்புவதை பொங்கலை தவிர மற்ற பண்டிகைகளில் பார்க்க முடியாது.-- பிரீத்தா, முதலாமாண்டு பி.எட்., மாணவிசமத்துவ பொங்கலே சாட்சிவீட்டில் வைக்கும் பொங்கலை விட கல்லுாரி பொங்கலுக்கு டேஸ்ட் அதிகம். எந்தவித பாகுபாடும் பார்க்காத உண்மையான அன்பு கலந்து இருக்கும். கரும்பில் உள்ள இனிப்பு கல்லுாரி வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் கிடைக்கும் . சண்டையிடுவதும் , கேலி , கிண்டலும் மட்டுமல்ல கல்லுாரி வாழ்க்கையில் தமிழ்கலாசாரத்தை வளர்க்கும் எல்லா விஷயங்களிலும் மாணவிகளின் பங்கும் அதிகம் இருக்கும் என்பதற்கு சமத்துவ பொங்கலே சாட்சி.-- அர்ச்சனா, இரண்டாமாண்டு பி.எட்., மாணவிபேசாதவர்கள் கூட நண்பர்களானர்கல்லுாரியில் சேர்ந்த முதலாமாண்டில் கொண்டாடப்படும் பொங்கல் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற பண்டிகைகளில் மாணவர்களிடம் உள்ள ஒற்றுமை வளர்கிறது. நேற்று வரை பேசாமல் இருந்த தோழிகள் இந்த பொங்கல் விழாவால் பேசி நன்றாக பழக வாய்ப்பை அமைத்து கொடுத்தது. இந்த சமத்துவ பொங்கல் எங்களுக்குள் உள்ள பகையை போட்டியை மறைத்து பிரண்ட்ஷிப்பை வளர்க்கும் பொங்கல் விழாவாக உள்ளது.--காசி விசாலாட்சி, இரண்டாமாண்டு பி.எட்., மாணவி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X