பாழாகுது வணிக வளாகம், இறைச்சி கூடம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாழாகுது வணிக வளாகம், இறைச்சி கூடம்

Added : ஜன 14, 2020

சிவகாசி Lசிவகாசியில் நவீன இறைச்சி கூடம், வணிக வளாகம் கட்டப்பட்டு 12 ஆண்டுகளாகியும் பயன்பாட்டில் வராது அரசு நிதி வீணாடிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் இருந்தம் இறைச்சிகளை நகருக்குள் வெட்டப்பட்டு சுகாதார கேட்டை ஏற்படுத்தும் நிலையில் இதை தடுக்க உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்க்கிறது.சிவகாசியில் ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்டவைகளை குடியிருப்பு, மக்கள் நடமாடும் பகுதியில் திறந்த வெளியில் வெட்டி நகரை மாசுபடுத்தி வந்தனர். இதை தொடர்ந்து நகரை துாய்மைப்படுத்தும் நோக்கில் விஸ்வநத்தம் செல்லும் ரோட்டில் நவீன இறைச்சி கூடம், இறைச்சியை விற்பனை செய்ய வணிக வளாகத்தில் 126 கடைகளும் நகராட்சி சார்பில் கட்டப்பட்டது. இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டப்பட்ட சில நாட்கள் மட்டுமே கண்துடைப்பாக செயல்பட்டு வந்தன. அதன் பின் செயல்படவில்லை. செயல்படாத கட்டடங்களுக்கு செல்ல 2009ல் 50 லட்சம் ரூபாயில் ரோடு வசதியும் ஏற்படுத்தப்பட்டது. செயல்படவில்லை என தெரிந்தும் இந்நிதியையும் வீணாக்கினர். தற்போது இங்கு ஒரு சில கடைகளே செயல்படுகின்றன. இவைகளும் இறைச்சிக் கடைகள் இல்லை. கட்டப்பட்டு 12 ஆண்டுங்கள் ஆகி விட்ட நிலையில் இன்றும் அவைகள் காட்சிப் பொருளாகவே உள்ளன. இதனால் இப்பகுதி 'பாராகவும்' சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி விட்டது. இறைச்சி வதை கூடம், வணிக வளாக கட்டங்களும் உரிய பராமரிப்பு இல்லாதது சேதமடைந்து விட்டது. கட்டங்களை சுற்றி முட்புதர்கள் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் இருப்பிடமாகவும் மாறிவிட்டது.கட்டடங்கள் செயல்படமால் நகரில் பல்வேறு இடங்களில் ஆடு, மீன், கோழி உள்ளிட்ட இறைச்சிகள் இன்றும் திறந்தவெளியில்வெட்டப்பட்டு வருகிறது. இதன் கழிவுகளையும் முறையாக வெளியில் சென்று கொட்டுவதில்லை. ஆங்காங்கே வீசி விட்டு செல்கின்றனர். இக்கழிவுகளை நாய், மாடுகள் உணவுக்காக கிளறி சுற்றுப்புறத்தை மேலும் நாறடிக்கிறது. கடை மற்றும் கழிவுகள் உள்ள இடங்களை கடந்து செல்ல முடியவில்லை. மழைக் காலங்களில் ஏற்படும் துர்நாற்றத்தை சகித்து கொள்ளயும் முடியவில்லை. இருந்தும் நகராட்சி நிர்வாகம் எதையும் கண்டும் காணாது உள்ளது.வருவாயை பாழாக்கிட்டாங்கஒவ்வொரு கடைக்கும் வாடகை வசூல் செய்தால் நகராட்சிக்கும் கட்டடம் அமைந்திருக்கும் விஸ்வநத்தம் ஊராட்சிக்கும் வருமானம் கிடைத்திருக்கும். இத்தனை ஆண்டுகளாக இங்கிருந்து கிடைக்க வேண்டிய வருவாயும் வீணாகி விட்டது. நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. அரசு பணம் வீணாகி வருவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடைகள் இப்படியே பயன்பாட்டில் இல்லாமல் போனால் நாளடைவில் பராமரிப்பின்றி சேதமடைந்து விடும். அப்படி சேதமடைந்தால் அதற்கும் நகராட்சியிலிருந்து நிதி ஒதுக்கி மராமத்து பணிகள் மேற்கொண்டு மீண்டும் பணத்தை வீணடிப்பர் போலும்.- பாண்டியன், தனியார் ஊழியர், சிவகாசி.சமூக விரோத கூடாரமாகிறதுநவீன இறைச்சி கூடம், கடைகள் திறப்பு விழா காணப்பட்டு தற்போது வீணாகி வருகிறது. சில கடைகள் சேதமடைந்துவிட்டது. கடைகள் வாடகைக்கு விடப்படாததால் அரசுக்கு வரும் வருமானமும் இல்லாமல் போய்விட்டது. அரசு பணத்தை வீணடித்து விட்டனர் . கட்டப்பட்ட நோக்கமும் நிறைவேறவில்லை. அதிகாரிகளின் மெத்தன போக்கே இதற்கு காரணம். தற்போது கட்டடங்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் மட்டுமே நடக்கிறது. இதைகட்டுவதற்கு பதிலாக திருமண மண்டபம் அல்லது மருத்துவமனை என மக்கள் பயன்படுத்தும் வகையில் ஏதாவது கட்டியிருக்கலாம். இனிமேலாவது இதை முறைப்படுத்தி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆறுமுகச்சாமி, முன்னாள் கவுன்சிலர், சிவகாசி.தீர்வுஎந்த கடைகளும் செயல்படாததால் இறைச்சி விற்பனை செய்பவர்கள் கண்ட இடங்களில் தங்களின் கடைகளை வைத்துள்ளனர். இறைச்சிகளின் கழிவுகளை ரோட்டிலும், குடியிருப்புப் பகுதியிலும் கொட்டி விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. இறைச்சி வதை கூடத்தினையும் , கடைகளையும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடங்கள் செயல்பாட்டிற்கு வருவதால் நகராட்சிக்கும் வருமானம் கிடைக்கும். நகரும் கழிவுகளிலிருந்து விடுபட்டு துாய்மையடையும். மாவட்டநிர்வாகம்தான் மனது வைக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X