ஒரு போன் போதுமே

Added : ஜன 14, 2020
Advertisement

கழிவுநீரான மழைநீர்ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரோட்டில், லெக்கையன்கோட்டை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பைபாஸ் ரோடு துவக்கத்தில் உள்ள ஓடைப்பாலத்தில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியது. நாளடைவில் கழிவுநீராக மாறிவிட்டது. இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், கழிவுநீரை உடனே வெளியேற்ற வேண்டும்.- வீரம்மாள், ஒட்டன்சத்திரம்.கொசுத் தொல்லைஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் தெற்கு பகுதியில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. சாக்கடையை துார்வாரி கொசு மருந்து அடிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- கணபதி, ஒட்டன்சத்திரம்.பிளாஸ்டிக் அதிகரிப்புஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- லோகநாதன், ஒட்டன்சத்திரம்.ஆக்கிரமிப்பால் பாதிப்புஆத்தூர் ஒன்றியம், வக்கம்பட்டி மெயின் ரோட்டில் குறுகிய திருப்பம் உள்ளது. இதில் தனியார் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்கள் போக்குவரத்தில் நெரிசல், விபத்துகள் தொடர்கிறது. நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.--ஆர்.மாணிக்கம், வக்கம்பட்டி.அகற்றாத கழிவுகள்ஆத்தூர் ஒன்றியம், தேவரப்பன்பட்டியில் ரோட்டோரங்களில் குப்பையை குவிக்கின்றனர். தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுகாதார அதிகாரிகள் குப்பையை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.--வி.பாலமுருகன், தேவரப்பன்பட்டி.நெடுஞ்சாலையில் மண் குவியல்திண்டுக்கல்ல - வேடசந்துார் தேசிய நெடுஞ்சாலையில், இடது ஓரமாக, வழி நெடுகிலும் மண் குவியலாக உள்ளது. இதனால், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மண் குவியலை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முன்வர வேண்டும்.-- க.கந்தசாமி, வேடசந்துார்.வீணாகும் குடிநீர்வேடசந்துார் தாலுகா அலுவலகம் வழியாக ஒட்டன்சத்திரம் செல்லும் காவிரி குழாயில், பத்திரகாளியம்மன் கோயில் தென்புறம் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய நிர்வாகம் முன்வர வேண்டும்.--ஆர். இளையநிலா, வேடசந்துார்.சேதமான ரோட்டால் அவதிகோவிலுாரில் இருந்து, தங்கச்சியம்மாபட்டி வரை தார்ரோடு மிக மோசமாக சேதமடைந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அவதிக்கு ஆளாகின்றனர். ரோட்டை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.- ப.முனியப்பன், கோவிலுார்குண்டும் குழியுமான ரோடுதிருச்சி நான்கு வழிச்சாலையில் இருந்து செட்டி நாயக்கன்பட்டி செல்லும் ரோடு குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளது. வாகனங்கள் அடிக்கடி விழுந்து எழுந்து செல்கின்றன. பல ஆண்டுகளாக பராமரிக்காத இந்த ரோட்டை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தரம், திண்டுக்கல்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X