சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நூறு நாள் வேலையில் ரூ.3 கோடி ஊழலா கோட்டாநத்தம் மக்கள் மனு

Added : ஜன 14, 2020
Advertisement


திண்டுக்கல், 'திண்டுக்கல்லில் 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக குழு அமைத்து தணிக்கை செய்ய வேண்டும்' என, கோட்டாநத்தம் மக்கள், டி.ஆர்.ஓ., வேலுவிடம் மனு கொடுத்தனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பலரும் மனு கொடுக்க வந்தனர். மனுவை டி.ஆர்.ஓ., வேலு பெற்றார். கோட்டாநத்தம் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பது: கோட்டாநத்தத்தில் 2017 - 19 வரை நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.2 கோடியே 98 லட்சத்து 42 ஆயிரத்து 732 வரை ஊழல் நடந்துள்ளது.ஊழலில் ஈடுபட்டோர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, ஊழல் செய்த பணத்தை அபராதத்துடன் வசூல் செய்ய வேண்டும். ஜன.26 குடியரசு தினத்தில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் ஊழல் தொடர்பாக பொதுமக்கள் முன்பாக தணிக்கை குழு மூலம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, கூறியிருந்தனர்.மறுதேர்தல் வலியுறுத்தல்தமிழ் மொழி வளர்ச்சி தமிழக எல்லைக்காவலர் தியாகிகள் சங்க மாநில தலைவர் ராமசாமி: சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழ் எல்லை மீட்பு மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் அரசு வழங்குகிறது. தியாகிகள் சங்கம் சார்பில் தியாகிகளின் வாரிசுகள் அறியும்படி, ஜன.26 குடியரசு தின விழாவில் தியாகிகளுக்கு நினைவுச்சான்று அல்லது விருது வழங்க வேண்டும் என, கூறியிருந்தார்.நடகோட்டை ஊராட்சி தனலெட்சுமி மனு: உள்ளாட்சி தேர்தலில் நடகோட்டையில் 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகினேன். தொடர்ந்து சிற்றுராட்சி துணை தலைவருக்கு போட்டியிட்டேன். பிற வார்டு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. மறைமுக தேர்தல் நேர்மையாக நடத்தப்படவில்லை. தேர்தல் அலுவலர், ஊராட்சி செயலாளர் முறைகேடு செய்து வேறொருவர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதனால் நடகோட்டை சிற்றுராட்சி துணை தலைவர் தேர்தலை ரத்து செய்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என, கூறியிருந்தார்.நிலத்தில் ஆக்கிரமிப்புகொடைக்கானல் வட்டக்கானல் கோமதி: வட்டக்கானல் பகுதியில் புறம்போக்கு இடத்தில் வசிக்கிறேன். அதனை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை மீட்டுத் தர வேண்டும், என மனு கொடுத்தார். முன்னதாக, இவர் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல், நிலத்திற்கு பட்டா கேட்டு வந்த தம்பதியரிடமும் மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X