சாணார்பட்டியில் வீணாகும் காவிரி குடிநீர்

Added : ஜன 14, 2020
Share
Advertisement
சாணார்பட்டி, சாணார்பட்டியில் ரோடு விரிவாக்க பணியின் போது குழாய் சேதமடைந்ததால் குடிநீர் வீணாகிறது.திண்டுக்கல்லில் இருந்து நத்தம் பகுதிக்கு இவ்வழியாக காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் செல்கிறது. 6 மாதங்களுக்கு முன்பிருந்து திண்டுக்கல் - -நத்தம் ரோடு விரிவாக்க பணி நடந்து வருகிறது. ரோட்டின் இருபுறமும் உள்ள பகுதியை திடப்படுத்துவதற்காக மண்ணை அகற்றி, கிராவல் மற்றும்

சாணார்பட்டி, சாணார்பட்டியில் ரோடு விரிவாக்க பணியின் போது குழாய் சேதமடைந்ததால் குடிநீர் வீணாகிறது.திண்டுக்கல்லில் இருந்து நத்தம் பகுதிக்கு இவ்வழியாக காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் செல்கிறது. 6 மாதங்களுக்கு முன்பிருந்து திண்டுக்கல் - -நத்தம் ரோடு விரிவாக்க பணி நடந்து வருகிறது. ரோட்டின் இருபுறமும் உள்ள பகுதியை திடப்படுத்துவதற்காக மண்ணை அகற்றி, கிராவல் மற்றும் ஜல்லி கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.சமீபத்தில் சாணார்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் இப்பணி நடந்தது. இதில் ரோட்டின் இடதுபுறம் பதிக்கப்பட்டிருந்த காவிரி குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால் தண்ணீர் கசிந்து வீணாகிறது. தோண்டப்பட்ட பள்ளங்களில் தேங்கும் தண்ணீரில், அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சேதமடைந்த குழாயில் கலக்கும் வாய்ப்பு உள்ளது.இதனால் நோய்த்தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் போதிய மழையின்றி குடிநீருக்கு சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில் குழாய் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். சேதமடைந்த குடிநீர் குழாயை விரைந்து சீரமைக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X