திண்டுக்கல் கிரிக்கெட் போட்டி முடிவுகள்

Added : ஜன 14, 2020
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் கிரிக்கெட் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.ஏ., எஸ்.பி.எம்., பொறியியல் கல்லுாரியில் பள்ளிகளுக்கு இடையே லீக் போட்டி நடந்தது.பி.எஸ்.என்.ஏ., கோப்பை போட்டியில் திண்டுக்கல் ஜான்பால் பள்ளி அணி 28.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 27.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களுக்கு வெற்றி பெற்றது. முகமது பகீம் 33 ரன் எடுத்தார்.திண்டுக்கல் ஸ்ரீ மகரிஷி வித்யாமந்திர் அணி 21.5 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கோகுல் 35 ரன், கீர்த்தி வர்மன் 3 விக்கெட் எடுத்தனர். திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் அணி 21.3 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.வடமதுரை அரசு பள்ளி அணி 25 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோதிபாசு 36 ரன், கார்த்திக் 3 விக்கெட் எடுத்தனர். கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி பள்ளி அணி 16 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.சத்திரப்பட்டி அரசு பள்ளி அணி 20.2 ஓவரில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தினேஷ்பாபு 31 ரன், மனோஜ்குமார், தனுஷ் தலா 3 விக்கெட் எடுத்தனர். ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி 25 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களுக்கு தோற்றது.திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளி 25 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 22.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களுக்கு வெற்றி பெற்றது. முகமது பகீம் 48, ஆர்யன் கட்கர் 39 ரன்களுக்கு நாட் அவுட்.வடமதுரை அரசு பள்ளி அணி 30 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தனர். தனுஷ்குமார் 57 ரன், ஹரீஷ்குமார் 4 விக்கெட் எடுத்தனர். திண்டுக்கல் ஸ்ரீ மகரிஷி வித்யா மந்திர் அணி 24.3 ஓவரில் 104 ரன்களுக்கு தோற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X