பொது செய்தி

தமிழ்நாடு

5 இடங்களில் ஜல்லிக்கட்டு விழா நடத்த ஏற்பாடு

Added : ஜன 14, 2020
Advertisement

திண்டுக்கல், பொங்கலை முன்னிட்டு, திண்டுக்கல்லில் 5 இடங்களில் ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் இறுதி வரை பொங்கல், கோயில், தேவாலய திருவிழாக்களையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.இந்தாண்டு பொங்கல் நெருங்கிவிட்டதால் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் தீவிர ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல், நத்தம், பழநியில் 11 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த இதுவரை 8 கிராமத்தினர் விண்ணப்பித்துள்ளனர். அதில் திண்டுக்கல் நத்தம்மாடிப்பட்டி, மறவபட்டி, கொசவபட்டி, உலகம்பட்டி, பழநி பெரியகலையமுத்துாரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து அனுமதிக்கப்படும் இடங்கள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டதும் அந்த கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தலாம். மேலும் ஏ.வெள்ளோட்டில் 2 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அக்கிராமத்தினர் மனு கொடுத்திருந்தனர்.அங்கு ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.அனுமந்தராயன்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடத்த கொடுத்த மனுவை மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளது. அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி யாரும் நடத்த முடியாது. இருப்பினும் அரசுக்கு போட்டி நடத்த பரிந்துரை செய்யப்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. பிற மாவட்டங்களை காட்டிலும் திண்டுக்கல்லில் அதிகமான இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அதனால் ஏப்ரல் இறுதி வரை ஜல்லிக்கட்டுக்கு கிராமத்தினர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X