சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement

செம்பட்டி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்டார தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். துணை அலுவலர் சீதாலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மகுடபதி, கோரிக்கை குறித்து பேசினார்.உள்ளாட்சி தேர்தலின்போது, விருதுநகர், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் அலுவலக ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அலுவலக பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர், கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.பழநி

பழநியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாபர் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.பழநி வரதாபட்டினம் வரை இயக்க வேண்டிய மினி பஸ்ஸை ஆயக்குடி வரை இயக்கும் மினிபஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத வட்டார போக்குவரத்து அலுவலரை கண்டித்தும் குளத்து ரோடு ரவுண்டானா அருகில் ஆர்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ராஜ்மோகன் காந்தி, பொறுப்பாளர் வினோாத், மகளிர் அணி செயலாளர் சுபா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X