பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு நிறுவன சர்வதேச ஊழியர்கள் படையெடுப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள, பல்லவர் கால கலைச்சிற்பங்களை காண, ஆண்டு முழுவதும், உள்நாட்டு பயணியர், சுற்றுலா வருகின்றனர்.வெளிநாட்டு பயணியர், அக்டோபர் மாதம் துவங்கி, அடுத்த சில மாதங்கள், மாமல்லபுரத்திற்கு வருவர்.இது ஒருபுறம் இருக்க, சென்னை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் சர்வதேச ஊழியர்களும், இங்கு படையெடுக்கின்றனர்.
மென்பொருள், தகவல் தொழில்நுட்பம், மொபைல், கணினி, வாகன தயாரிப்பு உள்ளிட்டவற்றில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், நேற்று மாமல்லபுரம் வந்து, சிற்பங்களை ரசித்தனர்.இந்திய - ஜப்பான், இருநாட்டு கடலோர காவல் படையினர், சென்னை கடற்பகுதியில், ஐந்து நாட்கள், தேடுதல், மீட்பு, கடற்கொள்ளை பாதுகாப்பு என, கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.இதற்காக, ஜப்பான் கடலோர பாதுகாப்பு படையின், 'எசிகோ' ரோந்து கப்பல் மூலம், நேற்று முன்தினம், சென்னை வந்தனர். பயிற்சிக்கு முன், நேற்று மாலை, அவர்கள் மாமல்லபுரம் வந்தனர்.
நாளை பொங்கல் சுற்றுலாதமிழக, உழவர் கலாசார, பொங்கல் பண்டிகையின்போது, இச்சிறப்பை, வெளிநாட்டு பயணியருக்கு உணர்த்த, சுற்றுலா துறை, பொங்கல் சுற்றுலா விழா நடத்துகிறது.இவ்விழா, மாமல்லபுரம் அடுத்த, வடகடம்பாடி பகுதியில், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. கிராம சூழலில், பொங்கல் பொங்கி, நாட்டுப்புற கலைகள் நிகழ்த்தி, பாரம்பரிய விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X