பொது செய்தி

தமிழ்நாடு

பழையசீவரத்தில் பார்வேட்டை வரும் 16ல் வரதராஜர் வீதியுலா

Added : ஜன 14, 2020
Advertisement

பழையசீவரம்:பார்வேட்டை உற்சவத்தையொட்டி, பழையசீவரம் கிராமத்திற்கு, 16ம் தேதி, வரதராஜ பெருமாள் எழுந்தருள்கிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று, பார்வேட்டை உற்சவத்தில், பழையசீவரம் மலைக்கு செல்வார்.இதற்காக, நாளை இரவு, 9:30 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.டோல்கேட், திம்மராஜம்பேட்டை, சங்கராபுரம், பழையசீவரம் ஊர்களில் பெருமாள் வீதியுலா சென்று, 16ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, பழையசீவரம் மலைமேல், பெருமாள் எழுந்தருள்வார். அங்கு, திருமஞ்சனம் மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு பின், மாலை, 5:00 மணிக்கு, திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்வார்.அங்கு, சாலவாக்கம், திருமுக்கூடல், பழையசீவரம், காவாந்தண்டலம், காஞ்சி வரதர் உள்ளிட்ட பெருமாள்கள், ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.தொடர்ந்து, வரதராஜ பெருமாள், ஏரிவாய், படப்பம், தேனம்பாக்கம் கிராமங்களின் வழியாக, 17ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, காஞ்சிபுரத்தை அடைகிறார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பார்வேட்டை உற்சவம், காணும் பொங்கலான, 17ம் தேதி நடைபெறுகிறது.அன்று காலை, 8:00 மணிக்கு, கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. பல்வேறு வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன், திம்மசமுத்திரம் திரிபுராந்தகேஸ்வரர் கோவிலில் எழுந்தருள்கிறார்.அங்கு, சுவாமிக்கு, பல வகையான அபிஷேகம் நடைபெறும். இந்த பார்வேட்டை உற்சவத்தை காண, சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் வருவர்.அன்று இரவு, 10:00 மணிக்கு, வாண வேடிக்கை முடிந்து, அங்கிருந்து கிளம்பும் ஏகாம்பரநாதர், மீண்டும் காஞ்சிபுரம் வந்தடைகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X