பொது செய்தி

தமிழ்நாடு

இருளர்களுக்கு மனை பட்டா செங்கை கலெக்டர் உத்தரவு

Added : ஜன 14, 2020
Advertisement

செங்கல்பட்டு:இருளர் இன மக்களுக்கு, வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, குறைதீர் கூட்டத்தில், வருவாய் துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் ஜான் லுாயிஸ் நேற்று உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கில், கலெக்டர் ஜான் லுாயிஸ் தலைமையில் நேற்று நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கலெக்டர் நேர்முக உதவியாளர் விஜயகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த முகாமில், வீட்டுமனை பட்டா, மின் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை கோரி, 200 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், கலெக்டர் உத்தரவிட்டார்.இருளர் இன மக்கள், காயரம்பேடு: கூடுவாஞ்சேரி அடுத்த, காயரம்பேடு ஊராட்சியில், 50 ஆண்டுகளாக, 30க்கும் மேற்பட்ட இருளர்கள், குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். எங்களுக்கு வீட்டு மனை பட்டா, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு ஆகியவை வழங்க வேண்டும்.மேற்கண்ட பகுதியில், 11ம் தேதி, தீ விபத்தில், 22 குடிசைகள் தீப்பற்றி எரிந்தன. வீட்டில் இருந்த துணி உட்பட அனைத்தும் எரிந்து நாசமாகின. தற்போது, அரசு பள்ளியில், எங்களை தங்க வைத்துள்ளனர். எனவே, மனை பட்டாவுடன், வீடுகளையும் கட்டித் தர, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜான் லுாயிஸ், மாவட்ட கலெக்டர்: காயரம்பேட்டில், இருளர் இன மக்களுக்கு, இலவச வீட்டுமனை மற்றும் வீடுகள் கட்டித் தர, வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும்.
எம்.உஷா, பேரமனுார்: மறைமலை நகராட்சி பேரமனுாரில், பல ஆண்டுகளாக, 100க்கும் மேற்பட்டோர் அரசு நிலத்தில் வீடு கட்டி வசிக்கின்றனர். பட்டா வழங்கக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம், பல ஆண்டுகளாக மனு அளித்தோம்; எந்த நடவடிக்கையும் இல்லை. வீட்டுமனை பட்டா வழங்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X