பொது செய்தி

தமிழ்நாடு

மீன்வள உதவியாளருக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜன 14, 2020
Advertisement

மதுரை, மதுரை அரசு மீன்வளத்துறையின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இரு மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஒரு பதவிக்கு 1:15 என்ற விகிதத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியலுடன் விளம்பரம் மூலம் பெறப்பட்ட தகுதியான நபர்கள் சேர்த்து நேர்காணல் நடத்தப்படும். ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமை பெற்றவர் பிரிவிற்கு இப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிப்போர் நீச்சல், வீச்சு வலை வீசுதல், மீன்பிடி வலை பின்னுதல் மற்றும் தமிழில் எழுத படிக்க அவசியம் தெரிந்திருக்க வேண்டும். ஒ.சி.,-30, எம்.பி.சி.,/பிசி-32, எஸ்.சி.,/எஸ்.டி., - 35 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தேவையான சான்று நகல்களுடன் ஜன., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை - 625 001. போன்: 0452- 234 7200.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X