பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை நோய் முகாம்

Added : ஜன 14, 2020
Advertisement

கொளத்துார்: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில், ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் டவுன் லயன் சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து, சர்க்கரை நோய் சிறப்பு முகாமை, நேற்று நடத்தின. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.புகையில்லா போகிக்கு பேரணிவாலாஜாபாத்: புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து, வாலாஜாபாத் பஸ் நிலையத்தில், நேற்று, பேரணி நடந்தது.பேரணியில் பங்கேற்ற மாணவியர், புகையில்லாத போகியை கொண்டாடுவது குறித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காஞ்சிபுரம் அடுத்த புள்ளளூர் மேல்நிலைப் பள்ளி மாணவியரும், பேரணி சென்றனர்.
காவலர் தேர்வு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள், உதவி ஆய்வாளர் பணிக்கு, 379 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, காஞ்சிபுரம் தனியார் பள்ளியில், நேற்று, எழுத்து தேர்வு நடந்தது. இதில், 16 பேர் பங்கேற்கவில்லை.இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சில நாட்கள் கழித்து, உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு பரிசளிப்பு
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளாரின், 80ம் ஆண்டு முத்து விழாவையொட்டி, ஆதிபராசக்தி குழும கல்லுாரிகளில், பல மாவட்டங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பல விதமான போட்டிகள் நடந்தன.இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஆதிபராசக்தி பாராமெடிக்கல் கல்லுாரி தாளாளர் டாக்டர் இ.ஸ்ரீலேகா செந்தில்குமார் பங்கேற்று, சான்றிதழ், காசோலை மற்றும் பரிசுகள் வழங்கினார்.
மதுக்கடை மூட உத்தரவு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், வரும், 16ம் தேதி, 26ம் தேதி மூட வேண்டும். இந்நாட்களில், அத்துமீறி மதுபானம் விற்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ஜான் லுாயிஸ் அறிவித்துள்ளார்.3,896 மனுக்கள் ஏற்புஊத்துக்கோட்டை: கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஊத்துக்கோட்டை தாலுகாவில், 96 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், 147 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கடந்த, 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது. இதில் பெயர் சேர்த்தல், 3,542; நீக்கல், 45; திருத்தம், 183; பாக மாற்றம், 126 என, மொத்தம், 3,896 மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X