சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருமான வரி அதிகாரியாக நடித்து நுாதன திருட்டு

Added : ஜன 14, 2020
Advertisement

வருமான வரித் துறை அதிகாரிகள் போல நடித்து, சினிமா பாணியில், வியாபாரி வீட்டில், 5 சவரன் நகை, 1.10 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்ற கும்பலை, கோயம்பேடு போலீசார் தேடி வருகின்றனர்.
நெற்குன்றம், பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் முகமது நுாருல்லா, 69; கறிக் கடை வியாபாரி. இவரது வீட்டிற்கு, நேற்று காலை, நான்கு பேர் காரில் வந்துள்ளனர். அவர்கள், தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் என, நுாருல்லாவிடம் அறிமுகப்படுத்தியபடி, வீட்டிற்குள் நுழைந்தனர்.பின், வீட்டை சோதனை செய்வது போல் நடித்து, பீரோவில் இருந்த, 1.10 லட்சம் ரூபாய், 5 சவரன் நகையுடன் தப்ப முயன்றனர்.
சந்தேகமடைந்த நுாருல்லா, அவர்களை தடுக்க முயன்றார். அவரை சரமாரியாக தாக்கிய கும்பல், காரில் ஏறி தப்பியது.சூர்யா நடிப்பில் வெளியான, தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில், வருமான வரித் துறை அதிகாரிகள் போல் நடித்து, நான்கு பேர் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X