அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அந்தமானுடன் சேர்த்து 40 தொகுதிகளில் வெற்றி'

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (39)
Advertisement
அந்தமான், ஸ்டாலின், 40, சுனில்அரோரா, கருணாநிதி_சிலை திறப்பு _விழா

சென்னை: 'லோக்சபா தேர்தலில், அந்தமானுடன் சேர்த்து, 40 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்சியினருக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்: அந்தமான் தி.மு.க., அலுவலகத்தில், கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அந்தமான் மாநில செயலர், கே.ஜி.தாஸ், 'கருணாநிதியை, தமிழின தலைவராக குறிப்பிடுகிறீர்கள்; அது தவறு. அவர் இந்தியாவின் தலைவர்' என்றார். அது, தொண்டர்களுக்கு கிடைத்த பெருமை.

அந்தமான் மாநில செயலர் குழந்தை, என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். 'இனிமேல், தி.மு.க., - காங்கிரஸ்கூட்டணி, லோக்சபா தேர்தலில், தேனி தவிர்த்து, தமிழகம், புதுச்சேரியில், 39 இடங்களில் வென்றது என சொல்லாதீர்கள்; அந்தமானையும் சேர்த்து, 40 இடங்களில், நமக்கு வெற்றி என, சொல்லுங்கள்' என்றார். அது, தி.மு.க.,விற்கும், அங்கு வாழும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


புகார் மனு:

டில்லியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில்அரோரா, தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆகியோரை, தி.மு.க., முதன்மை செயலர் டி.ஆர். பாலு, நேற்று சந்தித்து மனு அளித்தார். அதில், 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும், அதில், முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
16-ஜன-202015:36:09 IST Report Abuse
TamilArasan (ஜ)சப்பான எப்படி இந்த சர்வாதிகார சப்பாணி விட்டுவிட்டார்...
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
16-ஜன-202014:27:54 IST Report Abuse
Ravichandran அமெரிக்கா செனட் சபையும் நாம்தான் முழுசும், அடி அடி அட்டிர சக்கை. அடுத்த முறை ஜெய்க்காட்டி அந்தமான் காரனை பெருமை கெட்டவனு சொல்லுவியா.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
16-ஜன-202000:23:45 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஏதோ ஐ நா சபைதான் "இந்தியாவின் தலைவர்" என்று சொன்னது என நினைத்தால், திமுகவைச் சார்ந்தவர்தான் இப்படிக் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, 38 பிரதிநிதிகள் பாராளுமன்றம் போய் தமிழும் புரியாமல் ஹிந்தியும் தெரியாமல் ஆங்கிலமென்றால் என்னவென்றே அறியாமல் திகைத்துப்போய் இருக்கின்றார்கள். இந்த நிலையில், 40 ஆகி என்ன சாதிகப் போகின்றார்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X