பொது செய்தி

தமிழ்நாடு

121 அடியாக பெரியாறு

Added : ஜன 14, 2020
Advertisement

கூடலுார் : நீர்பிடிப்பில் மழையின்றி பெரியாறு அணை நீர்மட்டம் 121 அடியாக குறைந்தது.

வடகிழக்கு பருவமழையால் அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டியது. கடந்த சில தினங்களாக மழையில்லை. நீர்வரத்து வினாடிக்கு 229 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், விவசாயத்திற்காக 800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் குறைந்து நேற்று காலை நிலவரப்படி 121.10 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 2846 மில்லியன் கன அடியாகும்.தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடி தற்போது துவங்கியுள்ளது.

இதற்கு 2 மாதத்திற்கு மேல் தண்ணீர் தேவை உள்ளது. அணையில் தற்போதுள்ள நீர்இருப்பு இதற்கு போதுமானதாக இருக்காது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீர்பிடிப்பில் மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X