சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., கொலை: வாடகை வீட்டில் பயங்கரவாதிகள்

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 எஸ்.ஐ., கொலை: வாடகை வீட்டில் பயங்கரவாதிகள்

நாகர்கோவில் : பெங்களூருவில் நண்பர்களை கைது செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் பயங்கரவாதிகளால் எஸ்.ஐ., வில்சன் சுட்டுக்கொல்லப்படிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையில் இருவரும் தங்கி இருந்ததற்கான ஆதாரம் சிக்கி உள்ளது.ஜன.8 இரவில் களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்.ஐ., வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டவர்கள் தப்பிச்சென்ற காட்சிகள் காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.திருவிதாங்கோடு அப்துல் சமீம் 32, கோட்டார்இளங்கடை தவுபிக் 28, ஆகியோர் கொலையாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இவர்களை தேடும் பணியில் தமிழகம், கேரளாவில் 13 தனிப்படைகள் ஈடுபட்டுள்ளன. கன்னியாகுமரி எஸ்.பி., ஸ்ரீநாத் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கைதுக்கு பழிவாங்க...ஜன. 7ல் பெங்களூருவில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் முகம்மது ஹனிப்கான், இம்ரான்கான், முகம்மது சையதுவை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அப்துல் சமீம், தவுபிக் இவர்களது கூட்டாளிகள். கைது செய்ததற்கு பழிவாங்கும் வகையில் அடுத்த நாளே எஸ்.ஐ., வில்சனை கொன்றிருக்கலாம் என கருதப்படுகிறது. கொலையாளிகள் இருவரும் ஜன. 8ல் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையில் நடமாடிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகின. அவர்கள் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். திருவனந்தபுரம் விதுராவை சேர்ந்த சையது அலி மூலம் வாடகைக்கு வீடு எடுத்ததும், எஸ்.ஐ.,யை கொல்வதற்கு முந்தைய நாட்களில் அங்கு தங்கியிருந்த தகவலையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜன-202016:16:04 IST Report Abuse
Endrum Indian பின்னே என்ன சொந்த வீடா இந்த தீவிரவாதிகள் வாங்கி அங்கேயே இருக்க முடியும், தினம் தினம் அல்லது வாரத்துக்கு ஒருமுறை தன் இருப்பிடம் மாற்றிக்கொண்டே இருப்பவர்களுக்கு வாடகை வீடு எப்படி கிடைத்தது???
Rate this:
Share this comment
Cancel
16-ஜன-202012:58:45 IST Report Abuse
N.K (நான் தண்டக்கோண் இல்லை) முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தருவதில்லை என்றால் மதவாதி முத்திரை குத்தி கூச்சல் போடுகிறார்களே. இப்பொழுது தெரிகிறதா காரணம். ஒரு சில முஸ்லிம்கள் மட்டுமே நல்லவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-ஜன-202009:45:58 IST Report Abuse
RajanRajan இந்த மார்க்கவாதிகளுக்கு சுடலை தம்பி என்ன மாதிரி கஞ்சி காய்ச்சுவாரோ அல்லது அந்த நாலு லட்சம் நிவாரணத்தோட கம்முன்னு கைகழுவிருவாரோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X