பொது செய்தி

தமிழ்நாடு

30 ஆண்டு கால அரசமரம் வேரோடு அழிக்கும் முயற்சி

Added : ஜன 14, 2020
Advertisement
 30 ஆண்டு கால அரசமரம் வேரோடு அழிக்கும் முயற்சி

நங்கநல்லுார்:நங்கநல்லுாரில், 30 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அரச மரத்தை வேரோடு அழிக்கும் முயற்சியில், சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நங்கநல்லுார், ஐந்தாவது மெயின் ரோட்டில், தனியார் மருத்துவமனை எதிரில், அரச மரம் ஒன்று உள்ளது. இது, 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.இதன் கிளை, மின் கம்பிகளில் உரசி வந்தன. சமீபத்தில், மின் வாரியத்தின் சார்பில் பிரச்னைக்குரிய கிளைகள் மட்டும் அகற்றப்பட்டன.இதை சாக்காக வைத்து, சமூக விரோதிகள் மரத்தின் கிளைகளை முழுமையாக அகற்றினர். தற்போது, மரக்கிளைகள் இன்றி மொட்டையாக காட்சிஅளிக்கிறது.இது அங்குள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகி உத்தரவின்படி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
எஞ்சிய மரத்தை கோணிப் பை போட்டு மூடி வைத்துள்ளனர்.இந்நிலையில், முழு மரத்தையும் வேரோடு அகற்றும் முயற்சியும் நடக்கிறது. சமூக ஆர்வலர்கள் சிலர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர். அவர்களுக்கு கணிசமான தொகை கொடுத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எனவே, இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இருக்கும் மரத்தை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X