சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, 2 மகன்களை கொலை செய்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை முயற்சி

Added : ஜன 14, 2020
Advertisement

திருச்சி : இரு மகன்கள் மற்றும் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, நகைக்கடை உரிமையாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 47. இவரது மனைவி செல்லம், 43. இவர்களுக்கு நிகில், 20, முகில், 14, என இரு மகன்கள் இருந்தனர். இதில் நிகில் மனவளர்ச்சி குன்றியவர். ஊரணிபுரத்தில், நிகில் தங்கமாளிகை என்ற பெயரில் செல்வராஜ் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் திருச்சி வந்த செல்வராஜ், சிங்காரத்தோப்பு பகுதியில் மகாராஜ் ஓட்டலில் தங்கியுள்ளார். ஊரில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்து, தன்னை லாட்ஜில் வந்து சந்திக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து அந்த உறவினர் நேற்று இரவு, 10.30 மணியளவில் லாட்ஜில் வந்து பார்த்தபோது, நிகில், முகில், செல்லம் ஆகிய மூவரும் கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். செல்வராஜ் கழுத்தறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த கோட்டை போலீசார், செல்வராஜை திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டல் அறையில் செல்வராஜ் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், மகன் நிகில் மனவளர்ச்சி குன்றி இருப்பதை தாங்க முடியாமல், மூவரையும் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளார். இதுகுறித்து கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X