பொது செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரம், அலங்காநல்லூரில் நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு

Added : ஜன 14, 2020
Advertisement

மதுரை : ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு தலைமையில், அவனியாபுரம், அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை, அவனியாபுரத்தில், ஜன., 15, பாலமேட்டில் ஜன., 16, அலங்காநல்லுாரில் ஜன., 17ல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் தொடர்பாக, சர்ச்சைகள் வெடித்து, உயர் நீதிமன்ற கிளையில், பல வழக்குகள் தொடரப்பட்டன.இவற்றை விசாரித்த, நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு உத்தரவு:அவனியாபுரம், அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த, ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி மாணிக்கம் தலைமையில், ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது.

அவனியாபுரம் குழுவில் கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் உறுப்பினர்களாக இடம் பெறுவர். அவனியாபுரத்தைச் சேர்ந்த, 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது.அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் குழுவில், கலெக்டர், தென்மண்டல ஐ.ஜி., அலங்காநல்லுார் பேரூராட்சி உதவி இயக்குனர், உறுப்பினர்களாக இடம் பெறுவர். அலங்காநல்லுாரைச் சேர்ந்த, 36 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது.

அவனியாபுரம், அலங்காநல்லுாரில், இந்த ஆண்டு, நீதிபதி தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவே ஜல்லிக்கட்டை நடத்தும்.பாலமேட்டில் இந்த ஆண்டு, 'கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக் கமிட்டி'யே ஜல்லிக்கட்டை நடத்தும். இதை, ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, மேற்பார்வை செய்யும்.ஜல்லிக்கட்டு நன்கொடைகள் பெற அவனியாபுரம், அலங்காநல்லுார், பாலமேட்டில் வங்கி கணக்குகளை துவக்க வேண்டும்.

வரவு - செலவு கணக்குகளை ஒருங்கிணைப்பு குழு, முறையாக பராமரிக்க வேண்டும். காளைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் உட்பட யாருக்கும், முதல் மரியாதை அளிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு நிகழ்வை வீடியோ பதிவு செய்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில், எவ்வித விளம்பர பிளக்ஸ்களும் இடம் பெறக் கூடாது. அரசியல் கட்சிகளின் கொடிகள், ஜாதி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அவற்றை காட்சிப்படுத்தும் பொருட்கள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும்.

அவனியாபுரம் உட்பட மூன்று ஊர் ஜல்லிக்கட்டுக்கும், ஒருங்கிணைப்புக் குழு தலைவரான, ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கத்திற்கு, மதிப்பூதியமாக, தலா, 1.50 லட்சம் வீதம், 4.50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X