குரோம்பேட்டை:பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட, குரோம்பேட்டை, நேரு நகர், ரங்கநாதன் முதல் குறுக்கு தெருவில், 25 வீடுகள் உள்ளன.
இத்தெருவில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலை போடப்பட்டது. கடந்தாண்டு பள்ளம் தோண்டி, பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனால், சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.கோரிக்கையை அடுத்து, சாலையை சுரண்டி, ஜல்லி கொட்டி சமப்படுத்தினர். இரண்டு மாதங்கள் ஆகியும், சாலை போடாமல் அப்படியே உள்ளது. பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.கூர்மையான ஜல்லி மீது நடப்பதால், மாணவர்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். வாகனங்களும் பழுதடைகின்றன. எனவே, உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE