ஜல்லி போட்டு 2 மாதம் ஆகியும் சாலை அமைப்பதில் அலட்சியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லி போட்டு 2 மாதம் ஆகியும் சாலை அமைப்பதில் அலட்சியம்

Added : ஜன 14, 2020
Share
குரோம்பேட்டை:பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட, குரோம்பேட்டை, நேரு நகர், ரங்கநாதன் முதல் குறுக்கு தெருவில், 25 வீடுகள் உள்ளன. இத்தெருவில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலை போடப்பட்டது. கடந்தாண்டு பள்ளம் தோண்டி, பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனால், சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.கோரிக்கையை அடுத்து, சாலையை சுரண்டி, ஜல்லி கொட்டி
 ஜல்லி போட்டு 2 மாதம் ஆகியும் சாலை அமைப்பதில் அலட்சியம்

குரோம்பேட்டை:பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட, குரோம்பேட்டை, நேரு நகர், ரங்கநாதன் முதல் குறுக்கு தெருவில், 25 வீடுகள் உள்ளன.
இத்தெருவில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலை போடப்பட்டது. கடந்தாண்டு பள்ளம் தோண்டி, பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனால், சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.கோரிக்கையை அடுத்து, சாலையை சுரண்டி, ஜல்லி கொட்டி சமப்படுத்தினர். இரண்டு மாதங்கள் ஆகியும், சாலை போடாமல் அப்படியே உள்ளது. பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.கூர்மையான ஜல்லி மீது நடப்பதால், மாணவர்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். வாகனங்களும் பழுதடைகின்றன. எனவே, உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X