பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பு இல்லாத கழிவு நீர் வடிகால்

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 தடுப்பு இல்லாத கழிவு நீர் வடிகால்

கீழ்க்கட்டளை:தடுப்பு இல்லாத கழிவு நீர் வடிகாலால், மக்கள் விபத்து அபாயத்தில் தவித்து வருகின்றனர்.
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, சி.எல்.சி., ஒர்க் சாலையில், 10 ஆண்டுகளுக்கும் மேல், கழிவு நீர் வடிகால்செல்கிறது.இதில், கடந்த, 9ம் தேதி இரவு, பசு மாடு ஒன்று தவறி விழுந்தது. மீண்டு வெளியே வர முடியாத மாடு, விடிய விடிய கால்வாய்க்குள் இருந்தபடியே கூச்சலிட்டது.அடுத்த நாள் காலையில் அவ்வழியே வந்த, மக்கள், 'ப்ளூகிராஸ்' அமைப்பினருக்கு, தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்கள் உதவியுடன், அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி, மாடு மீட்கப்பட்டது. மேலும், இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, கழிவு நீர் வடிகாலை ஒட்டி தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X