குடியுரிமை திருத்த சட்டம் உ.பி.,யில் வேகம்| Dinamalar

குடியுரிமை திருத்த சட்டம் உ.பி.,யில் வேகம்

Added : ஜன 14, 2020

லக்னோ : ''உத்தர பிரதேசத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் வகையில், அகதிகளை அடையாளம் காணும் பணி துவங்கியுள்ளது,'' என, அம்மாநில அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியுள்ளார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மின்துறை அமைச்சராக உள்ள ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்தும் பணியை மாநில அரசு துவக்கியுள்ளது. பாக்., உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, அகதிகளாக வந்து தங்கியுள்ளவர்களை அடையாளம் காணும் பணி துவக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான தகவல்களை சேகரிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, 21 மாவட்டங்களில், 32 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் தகவல் சேகரிக்கப்பட்ட பின், முழுமையான விபரங்கள் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X