'மாணவர்கள் மீது அத்துமீறல் பார்லி., நிலைக்குழு கேள்வி

Added : ஜன 14, 2020
Advertisement

புதுடில்லி : 'போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது, டில்லி போலீசார், தடியடி, துப்பாக்கிச் சூடு போன்ற அதிகாரத்தை அத்துமீறி பயன்படுத்துவது ஏன்' என, உள்துறைக்கான பார்லி., நிலைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

டில்லி மற்றும் என்.சி.ஆர்., எனப்படும், தலைநகர் மண்டல பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது பற்றி ஆலோசிக்க, காங்., மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான, உள்துறைக்கான பார்லி., நிலைக்குழு நேற்று கூடியது.இதில், உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள், டில்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்னாயக் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தில், பார்லி., நிலைக்குழுவினர் கூறியதாவது:டில்லியில், போராட்டங்களை ஒடுக்குகிறோம் எனக் கூறி, அடிக்கடி, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது, தடியடி, துப்பாக்கிச் சூடு என, டில்லி போலீசார், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது ஏன்?மாணவர்களிடம், அதிகாரத்தை பயன்படுத்தாமல், பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X