மதுரை,தினமலர் மாணவர் பதிப்பு-'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்ற மெகா வினாடி வினா போட்டியில் மதுரை நரிமேடு ஜோதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.மாணவர் எதிர்காலம் கருதி தினமலர் நாளிதழ் 'பட்டம்' எனும் மாணவர்பதிப்பை வெளியிடுகிறது. பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளி அளவிலும், மாவட்ட மற்றும் மண்டலஅளவிலும் தினமலர் பட்டம் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் சார்பில் இந்த வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன.பள்ளிகள் தோறும் நடக்கும் இப்போட்டியின்தொடர்ச்சியாக ஜோதி மேல்நிலைப் பள்ளியில்நடந்த முதல்நிலை தேர்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது. அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தாளாளர் ரா.அருண் வினாடி வினா போட்டி நடத்தினார். சரியான விடை அளித்து அதிக மதிப்பெண் பெற்ற ம.நந்தன் (ஒன்பதாம் வகுப்பு) - இ.ஜலீல் அஹ்மத் (ஆறாம் வகுப்பு) ஜோடி வெற்றி பெற்றது.இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தினமலர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை தாளாளர் ரா.அருண் வழங்கினார். தலைமை ஆசிரியை பெட்ரீஷியா மேபல் முன்னிலை வகித்தார்.முதல் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தேர்வு பெற்ற மாணவிகளுக்கு தினமலர் கேடயம்வழங்கப்பட்டது. போட்டியை ஆசிரியைகள் ஆர்த்தி, தேவர் ஜோதி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.நிகழ்ச்சியை போத்தீஸ்,வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், லோட்டே காபி பைட், குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து வழங்கின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE