பொது செய்தி

தமிழ்நாடு

பழைய புத்தகங்களுக்கு மவுசு அதிகம்

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020
Advertisement
 பழைய புத்தகங்களுக்கு மவுசு அதிகம்

சென்னை:சென்னை புத்தக கண்காட்சியில், சனிக்கிழமை, ஞாயிறு கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் முன், பிடித்த புத்தகங்கள் வாங்க வந்தவர்கள் அதிகம். புத்தக தேடலில், கல்லுாரி மாணவ - மாணவியரின் பங்கு அதிகமாக இருந்தது.
கண்காட்சிக்கு வெளியே, பழைய புத்தகங்கள் விற்பனைக்கு இருந்தன. இங்கு, ஆங்கில கதை, நாவல், வரலாறு, பொது அறிவு குறித்த புத்தகங்கள் அதிகம் இருந்தன. இதில், 50 முதல், 500 ரூபாய் விலை கொண்ட புத்தகங்கள், 10 முதல், 150 ரூபாய்க்கு விற்கப்பட்டன. புதிய புத்தகம் வாங்க வசதி இல்லாதவர்களுக்கு, பழைய புத்தகம் கை கொடுத்தது.அரசியல், இலக்கியம் சார்ந்த புத்தகங்கள், 2,000 ரூபாய்க்கு வாங்கினேன். எட்டு ஆண்டுகளாக, கண்காட்சிக்கு வருகிறேன். வருவாயில் குறிப்பிட்ட தொகையை, புத்தகம் வாங்க ஒதுக்குகிறேன். தரமான புத்தகங்கள் அதிகம் வெளியிடு வதால், தேர்வு செய்ய எளிதாக இருக்கிறது.-எஸ்.நடராஜன், 50, ராயபுரம்.
பத்திரிகை செய்தியை பார்த்து, முதல் முறையாக குடும்பத்துடன் புத்தக கண்காட்சிக்கு வந்துள்ளோம். குழந்தைகளுக்கான, கதை புத்தகங்கள் அதிகம் வாங்கினோம். கீழடியில் உள்ள அனைத்து விஷயங்களையும் கண்காட்சியில் பார்த்தது, புது அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்கள் வாங்க முடிவு செய்துள்ளோம்.-கே.ஜீவலட்சுமி, 32, மாம்பலம்.
கல்கி, ஜெயமோகன் எழுத்துக்களை விரும்பி படிக்கிறேன். இன்று, கல்கியின், 'பொன்னியின் செல்வன்' முழுத் தொகுதியை வாங்கியுள்ளேன். நாவல்கள் ஒவ்வொன்றும், ஒருவித அனுபவத்தைத் தருகின்றன. தற்போது, 1,500 ரூபாய்க்கும் மேல் புத்தகங்களை வாங்கினேன்.-ஏ.பார்த்திபன், 27, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்,கிண்டி


வாசகர்கள் எதிர்பார்ப்பு!
புத்தக கண்காட்சி, அறிவு சார்ந்த இடமாக உள்ளது. குடும்பத்துடன் செல்லும் வாசகர்கள், பல மணி நேரம் அங்கு இருப்பதால், தின்பண்டம் விற்பனை கடைகள் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால், வளாக நடைபாதைகளில், துணி, மொபைல் கவர், ஹெட்போன் போன்ற பொருட்களும் விற்பனைக்கு இருந்தன. இதனால், புத்தக விற்பனை குறைய வாய்ப்புள்ளது. புத்தக விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இதர கடைகளுக்கு அனுமதி வழங்குவதை, 'பபாசி' பரிசீலிக்க வேண்டும் என, வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X