பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி கால் சென்டருக்கு வரவேற்பு ஒரே மாதத்தில் 1000 புகார்கள் மீது தீர்வு

Added : ஜன 14, 2020
Advertisement

மதுரை, மதுரை மாநகராட்சியில்துவங்கப்பட்ட நவீன புகார் மையத்தால் ஒரே மாதத்தில் 1000 புகார்கள் தீர்க்கப்பட்டன. இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.அடிப்படை வசதிகள்குறித்த புகார்களை தெரிவிக்க இருந்த புகார் மையம், டிசம்பரில் தரம் உயர்த்தப்பட்டது. அலைபேசி நிறுவனங்களின் 'கால் சென்டர்' போல வசதிகள் செய்யப்பட்டன. மக்கள் 84284 25000 அலைபேசி எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம்.இப்புகார்கள் ஆடியோவாக பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அதிகாரியின் அலைபேசி எண் புகார்தாரருக்கு வழங்கப்படும். மூன்று நாட்களுக்குள் புகாரை நிவர்த்தி செய்ய நிபந்தனை விதிக்கப்பட்டுஉள்ளது. தீர்வு கண்ட பின், சம்மந்தப்பட்ட அதிகாரி கால் சென்டருக்கு தெரிவிப்பார். இதை உறுதி செய்ய புகார்தாரருக்கு அழைப்பு விடப்படும்.
இவை செயற்கைகோள் உதவியுடன் தானியங்கி முறையில் நடக்கும். அதிகாரிகள் மெத்தனம் காட்ட முடியாது.ஒரு மாதம் முடிந்த நிலையில் 2 ஆயிரத்து 761 புகார்கள் பெறப்பட்டுஉள்ளன. 1000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுஉள்ளன. மீதமுள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்திலேயே முதன் முறையாக அமைக்கப்பட்ட இக்கால் சென்டரை மக்கள் பயன்படுத்திட வேண்டும் என கமிஷனர் விசாகன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X