பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு வீடுகள் இடிந்து 14 பேர் பலி

Added : ஜன 14, 2020
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதி கடும் பனி பொழிவு மற்றும் பலத்த மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் இடிந்து பெண்கள் குழந்தைகள் உட்பட ௧௪ பேர் பலியானார்கள்.பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு கடுமையாக உள்ளது. சில பகுதிகளில் மழையும் அதிகமாக பெய்கிறது. சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் பலுசிஸ்தான் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.குவெட்டாவில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. ஜாப் மாவட்டத்தின் ஷாஹாப்சாய் பகுதியில் வீடு இடிந்து விழுந்து மூன்று பெண்கள் குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலியாகினர்.

பாக். - -ஆப்கன் எல்லைக்கு அருகிலுள்ள கில்லி லுக்மான் பகுதியில் நிச்சயதார்த்த விழா நடந்த வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உட்பட ஐந்து பேர் இறந்தனர். பிஷின் மாவட்டத்தின் கில்லி சுகல் பகுதியில் கூரை பெயர்ந்து விழுந்து இரண்டு குழந்தைகளும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர்.காயம் அடைந்த ஏராளமானோர் குவெட்டாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலுசிஸ்தானை மற்ற நகரங்களுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகளில் ஏராளமான பயணியர் சிக்கி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தானை இணைக்கும் குவெட்டா ---- -சாமன் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான லாரிகள் மற்றும் வாகனங்கள் தேங்கியுள்ளன.இந்த பனிப்பொழிவு வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்று தலைமை வானிலை ஆய்வாளர் அஸ்மத் ஹயாத் கான் தெரிவித்துள்ளார். ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் சாலைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X