சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவர் கொலை வழக்கு ஆறு பேர் கைது

Added : ஜன 14, 2020
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி அருகே, இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கெங்கரை ஊராட்சி, மெட்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த, திம்மன், 19, ராமச்சந்திரன், 38. இருவரும், நர்சரியில் இரவு காவல் பணியில் இருந்த போது, கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். சோலுார்மட்டம் போலீசார், விசாரணை நடத்தினர். மெட்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த பாபு, 40, என்பவர் உட்பட ஆறு பேரை, நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:இரட்டை கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி பாபு. இவரது மகளும், கொலையான திம்மனும் காதலித்துள்ளனர்.

இதை, பாபு கண்டித்துள்ளார். பொங்கல் விழா முடிந்ததும், இருவரும் திருமணம் செய்ய, ஊரை விட்டு செல்ல திட்டமிட்டனர்.கொலையான ராமச்சந்திரன், கிராம மக்களை கேட்காமல், புறம்போக்கு நிலத்தை விவசாயம் செய்வதற்காக, சுத்தம் செய்துள்ளார். இதனால், கிராம மக்களுடன் பிரச்னை இருந்துள்ளது.இதை பயன்படுத்திய பாபு, தன்னுடன் ஐந்து பேரை சேர்த்து, 9ம் தேதி இரவு, நர்சரியில் துாங்கி கொண்டிருந்த திம்மன் மற்றும் ராமச்சந்திரனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X