பொது செய்தி

தமிழ்நாடு

அலங்காநல்லூர், பாலமேட்டில் தலா 700 காளைகளுக்கு டோக்கன்

Added : ஜன 14, 2020
Advertisement

அலங்காநல்லுார், அலங்காநல்லூரில் ஜன., 17 நடக்கும்பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டுக்கானகால்கோள் விழா கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது.எம்.எல்.ஏ., மாணிக்கம், தாசில்தார் கிருஷ்ணகுமார், டி.எஸ்.பி., ஆரோக்கிய ஆனந்தராஜ், விழா குழுவினர்மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கலெக்டர் கூறுகையில், ''ஜல்லிக்கட்டு சிறப்பாக நடக்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன,'' என்றார்.பாலமேட்டில் ஜன., 16 ல் நடக்கும் ஜல்லிக்கட்டு, அலங்காநல்லுாரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க தலா 700 காளைகளுக்குடோக்கன் வழங்கப்பட்டது. காளைகள் வளர்ப்போர் கால்நடைத் துறை வழங்கிய ஆவணத்துடன்நேற்று முன்தினம் இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்கி சென்றனர். கால்கோள் விழாவில் பங்கேற்ற கலெக்டரிடம் இதுகுறித்து சுட்டிகாட்டிய பின் காளை வளர்க்கும் பெண்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டது. கூடுதல் கவுன்டர்கள் மூலம் டோக்கன்களை பிரித்து வழங்கியிருந்தால் காத்திருந்ததை தவிர்த்திருக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X