மழைநீர் சேகரிப்பு வசதியின்றி நகரில் 1.59 லட்சம் கட்டடங்கள்

Added : ஜன 14, 2020
Advertisement

மதுரை, மதுரை மாநகராட்சி கணக்கெடுப்பில் 1.60 லட்சம் கட்டடங்களில் மழைநீர் வசதியுள்ளது தெரிந்தது. இவ்வசதி இல்லாத 1.59 கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கணக்கெடுப்பை துவங்கிய பொறியியல் பிரிவு அதிகாரிகள், இவ்வசதி இல்லாத வீடுகள், கட்டடங்களை அடையாளம் கண்டு நோட்டீஸ் ஒட்டினர். ஏற்கனவே அமைத்திருந்தால் அதற்கு மதிப்பெண் வழங்கினர். இக்கணக்கெடுப்பு நிறைவு பெற்றது.நகரில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 769 கட்டடங்களில் ஆய்வு செய்ததில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 687 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி இருப்பது தெரிந்தது. மீதமுள்ள 1.59 லட்சம் கட்டடங்களில் இல்லை. மழை துவங்க பல மாதங்கள் உள்ள நிலையில் அனைவரும் மழைநீர் சேகரிப்பு அமைக்க வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.கமிஷனர் விசாகன் கூறியதாவது: மழைநீர் சேகரிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எங்கள் நடவடிக்கைக்கு பின் புதிதாக 3 ஆயிரத்து 187 பேர் மழைநீர் சேகரிப்பு அமைத்துள்ளனர். அமைக்காத 1.59 லட்சம் கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X