பொது செய்தி

தமிழ்நாடு

மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி சான்று போலீஸ் தடியடி

Added : ஜன 14, 2020
Advertisement

அவனியாபுரம், மதுரை அவனியாபுரத்தில் நாளை (ஜன., 15) நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன், மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி சான்றுகள் வழங்கப்பட்டது. முண்டியடித்த வீரர்களை போலீசார் தடியடி நடத்தி ஒழுங்குபடுத்தினர்.மாடுபிடிவீரர்கள் நேற்று அதிகாலை 3:00 மணிக்கே போலீஸ் ஸ்டேஷன் எதிரிலுள்ள திருமண மண்டபத்தில் வரிசையில் நின்றனர். மாநகராட்சி மருத்துவக்குழுவினர் உடல் பரிசோதனை செய்து தகுதியான 730 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினர். 25 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். வரிசையில் நின்ற மாடுபிடி வீரர்கள் இரும்பு கேட்டுகளை தள்ளி சோதனை நடந்த இடத்திற்கு ஓடினர். பல வீரர்கள் விழுந்து காயமுற்றனர். போலீசார் தடியடி நடத்தி ஒழுங்குபடுத்தினர்.கால்நடை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் 15 பேர் கொண்டகுழுவினர் 700 காளைகளுக்கு டோக்கன் வழங்கினர். 700 காளைகளுக்கு மட்டும் அனுமதி என்பதால் 30 காளைகளின் உரிமையாளர்கள் திரும்பி சென்றனர். உதவி கமிஷனர் ராமலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X