பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரி செய்திகள்

Added : ஜன 14, 2020
Advertisement

பட்டு வளர்ப்பு கருத்தரங்கு
மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் விலங்கியல் துறை சார்பில் பட்டு வளர்ப்பு தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் நடந்தது. துறை தலைவர் ஜாய்ஷர்மிளா வரவேற்றார். தமிழ்நாடு பட்டு உற்பத்தி துறை மண்டல இணை இயக்குனர் ராமதுரை, முதுகலை துறை தலைவர் ஜோசப் தத்தேயுஸ், விஞ்ஞானிகள் ராஜாராம், மஹிமாசாந்தி பேசினர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர். இளங்கலை விலங்கியல் சங்க தலைவர் சிவரூபன் தம்பிரத்தினம் நன்றி கூறினார்.
தேசிய உணவியல் தின விழா
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலை கல்லுாரி மனையறிவியல் துறை மற்றும் வாய்ஸ் டிரஸ்ட் இணைந்து குலமங்கலத்தில் தேசிய உணவியல் தினவிழா லயன்ஸ் சங்க கவர்னர் ராமசாமி தலைமையில் நடந்தது. மனையறிவியல் துறை தலைவர் ஷர்மிளா வரவேற்றார். முதல்வர் வானதி துவக்கி வைத்தார். கல்லுாரி அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் சுஜாதா, சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், சிவக்குமார், ஊராட்சி தலைவர் ராணி உள்ளிட்டோர் பேசினர். இந்திய உணவியல் கழக துணை தலைவர் மாரீஸ்வரி பேசினார். கோலப்போட்டிகள் நடந்தன.வீதி நாடக பயிற்சி
மதுரை தமிழ் சங்கம் கல்லுாரியில் சோக்கோ
அறக்கட்டளை இயக்குனர் பிரான்சிஸ் தலைமையில் மூன்று நாட்கள் வீதி நாடகப் பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு நாள் விழாவில் முனிசெல்வன் வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) வேணுகா தலைமை வகித்தார். தமிழக மக்கள் பண்பாட்டு கழக தலைவர் பாண்டியன் தன்னம்பிக்கை குறித்து பேசினார். பயிற்சி பெற்ற மாணவர்கள் மது ஒழிப்பு, சூழலை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாடகம் நடித்தனர். துணை முதல்வர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி ஆர்த்தி நன்றி கூறினார்.மாணவர் பரிமாற்றம்மதுரையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் பள்ளி பரிமாற்றம் திட்டத்தின் கீழ் கொண்டபெத்தான் நடுநிலை பள்ளி மாணவர்கள், ஆண்டார்கொட்டாரம் அரசு உயர்நிலை பள்ளியை பார்வையிட்டனர். ஆண்டார்கொட்டாரம் தலைமை ஆசிரியர் முனியாண்டி தலைமை வகித்தார். கொண்டபெத்தான் பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன், ஆசிரியர் பயிற்றுனர் உமா முன்னிலை வகித்தனர். மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியைகள் தீபா கிறிஸ்டபெல், ஜெருசா மெர்லின், சிந்தாதிரை ஏற்பாடுகளை செய்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X