பிஸ்ட் பால்: 20 வீரர்கள் தேர்வு| Dinamalar

பிஸ்ட் பால்: 20 வீரர்கள் தேர்வு

Added : ஜன 14, 2020
Share

சென்னை:தேசிய சீனியர் பிஸ்ட் பால் போட்டிக்கு, தமிழகம் சார்பில், 20 வீரர் -- வீராங்கனையர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில், தேசிய சீனீயர் பிஸ்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டி, இம்மாத இறுதியில் துவங்குகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, வீரர் -- வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர்.தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ள வீரர் -- வீராங்கனையருக்கான, இறுதி தேர்வு முகாம், சோழிங்கநல்லுார், சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில், நேற்று முன்தினம் நடந்தது.இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட வீரர் -- வீராங்கனையர் பங்கேற்றனர். இவர்களில், ஆண்கள் -- 10; பெண்கள் -- 10 என, 20 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X