பொது செய்தி

இந்தியா

ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு : மாவோயிஸ்ட் தலைவர் பேட்டி

Updated : ஜூன் 24, 2010 | Added : ஜூன் 22, 2010 | கருத்துகள் (4)
Advertisement
Gyaneshwari express,Maoist leader, opposes,ஞானேஸ்வரி, ரயில்,மாவோயிஸ்ட்

கோல்கட்டா :"ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு சதியில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, ரயில் விபத்துக்கு மாவோயிஸ்டுகள் காரணம் என போலீசார் பொய்ப்பிரசாரம் செய்கின்றனர்' என, மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி கூறியுள்ளார்.


மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் 28ம் தேதி மாவோயிஸ்டுகள் நடத்திய "பந்த்'தின்போது தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டதில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்தில் 149 பேர் இறந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்துக்கு மாவோயிஸ்ட் பயங்கரவாத இயக்கத்தினரின் சதிச்செயலே காரணம் என கூறப்படுகிறது.இந்நிலையில், ரகசிய இடத்தில் இருந்து நேற்று போன் மூலம் செய்தி நிறுவனத்திற்கு கிஷன்ஜி அளித்த பேட்டி:நாங்கள் மக்களுக்காக போராடி வருகிறோம். எக்காரணம் கொண்டும் மக்களுக்கு எதிரான செயல்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம். ஞானேஸ்வரி ரயில் விபத்துக்கும், எங்களது இயக்கத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரயில் கவிழ்ப்பில் எங்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர்.


இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே மறுப்பு தெரிவித்தும், போலீசார் தங்களது சொந்த கற்பனையை கதையை கூறி வருகின்றனர்.இவ்வாறு கிஷன்ஜி கூறினார்.கடந்த மார்ச் மாதம் ஹாட்டிலோத் காட்டுப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் காயமடைந்ததாக கூறப்படும் கிஷன்ஜி, ரகசிய இடத்தில் இருந்து செய்தி நிறுவனத்திற்கு முதன்முறையாக பேட்டி கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elwin - Kanyakumari,இந்தியா
24-ஜூன்-201011:35:44 IST Report Abuse
 elwin மக்கள் உயிரை கொல்லும் எந்த ஒரு செயலையும் நியாய படுத்த இயலாது. இந்தியாவில் வாழும் அனைவரும் என் சகோதரர்கள் என்ற எண்ணத்தை மக்களும், ஆட்சி பீடத்தில் உள்ளவர்களும் உணர்ந்தாலோலிய நம் மண்ணின் குருதி ஈரம் உலர்தல் கடினமே....
Rate this:
Share this comment
Cancel
K Hariharan - NEWDELHi,இந்தியா
23-ஜூன்-201009:45:28 IST Report Abuse
 K Hariharan வெடி மருந்து நவீன வெடி திறன் kuudia sofesticated blasting method அந்த தனி நபர்ஹல்லுகு எங்கிருந்து கிடைத்தது??????
Rate this:
Share this comment
Cancel
கண்ணன் - Veloor,இந்தியா
23-ஜூன்-201009:14:07 IST Report Abuse
 கண்ணன் இது ரொம்ப நல்லா இருக்கப்பா ஒரு சாரர் நாங்க இல்லேன்னுங்க மற்றொரு சாரர் நாங்கள் தான்னுங்க. விஷயம் விபரீதமாகி மக்கள் எதிர்த்தவுடன் எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நாடகமாடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X