இளைஞர் தினம்: ஈஷாவில் விளையாட்டுப் போட்டி

Added : ஜன 14, 2020
Advertisement

கோவை:தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ஈஷா கிராமப்புத்துணர்வு இயக்கம் சார்பில் கபடி, எறிபந்து போட்டிகள், ஆதியோகி சிலை முன் நடந்தன.செம்மேடு, இருட்டுப்பள்ளம், மத்வராயபுரம், பேரூர், நரசீபுரம், புள்ளாக்கவுண்டம்புதுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர்.சீங்கபதி, பெருமாள் கோவில்பதி, முள்ளாங்காடு போன்ற பழங்குடியின கிராமங்களை சேர்ந்த பெண்கள், ஆர்வத்துடன் பங்கேற்றனர்.எல்லை பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் கமலேஷ் குமார், கபடி, எறிபந்து போட்டிகளை துவக்கி வைத்தார். எறிபந்து இறுதிப் போட்டியில், புள்ளாக்கவுண்டன்புதுார் அணியினர், முள்ளாங்காடு அணியினரை வீழ்த்தி, வெற்றி பெற்றனர்.கபடி இறுதி போட்டியில், பரமேஸ்வரம்பாளையம் புளூ ஸ்டார் அணியும், நரசீபுரம் வீரகாளை அணியும் மோதின. இதில், பரமேஸ்வரம்பாளையம் அணி வென்றது. இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சதானந்தம் பரிசு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X